சிவகாசியில் கடைசி கட்டப் பட்டாசு விற்பனையில் அரசியல் கட்சி சின்னங்களின் பட்டாசுகள் விற்பனை அமோகம்.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தி லுள்ள பட்டாசுக் கடைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களில் வரக்கூடிய தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான கடைசிக்கட்ட ப் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.
தற்போது தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிச் சின்னங்களின் வடிவமைப்பிலும், பெயர்களைச் சூட்டியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு ரகங்கள் அமோகமாக விற்பனையாகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தாமரைச் சின்னத்தின் பெயரிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்ன வடிவிலும், அதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்( டிடிவி தினகரன்) குக்கர் சின்ன வடிவத்திலும் புதியதாக பட்டாசுகள் அறிமுகமாகியுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான உதயசூரியன் வடிவமைப்பில் ஒளிரும் பட்டாசும் அறிமுகப்படுத்தப்பட்டு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசியல் கட்சி சின்னங்களின் வடிவமைப்பிலும், பெயர்களைத் தாங்கியும் வெளிவந்துள்ள புதிய ரகப்பட்டாசின் வரவினால் பட்டாசு க் கடைகளில் வியாபாரம் மும்முரமாகக் களைகட்டி சூடு பிடித்துள்ளது.
