Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

திமுக அமைச்சர்கள் எல்லாருமே ஊழல்வாதிகள் என்கிற இமேஜை மக்கள் மத்தியில் தவெக கட்டமைத்து வருகிற இந்த நேரத்தில் ஆடம்பரத்தை கல்யாணம் மூலமாக ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிய துரைமுருகன் குடும்பத்தின் மீது திமுக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறது.

சென்னையில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பேத்தி கல்யாணம் அம்பானி வீட்டு கல்யாணத்தை ஞாபகப்படுத்துகிற மாதிரி தடபுடலாக நடந்திருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இருந்து சோசியல் மீடியா இன்புளுயன்ஸ்கள்களை வரவழைத்து கல்யாணத்தோட பிரம்மாண்டத்தை உலகத்துக்கே எடுத்துக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 30 இன்பளுயன்சர்கள் வந்திருக்கிறார்கள்.

Duraimurugan

மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு ஹெவியாக பணம் செட்டில் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக மீது ஊழல் குற்றச்சாட்டைச் சொல்லி ஒவ்வொரு அமைச்சராக கைது செய்யும் தீவிரத்தில் தவெக ஆட்சி மேலிடம் இருக்கிற இந்த சமயத்தில் துரைமுருகன் வீட்டு ஆடம்பரத்தை அறிவாலயம் ரசிக்கவில்லை. துரைமுருகன் வீட்டு ஆடம்பர கல்யாணத்தை மக்கள் மத்தியில் கொண்டு போக தவெக திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் இவ்வளவு ஆடம்பரம் தேவையா?

இதையும் படியுங்க  விஜய் அரசை அலறவிட்ட எதிர்க்கட்சிகள்! முடங்கிய அனைத்துக்கட்சி கூட்டம் - தேமுதிக, திமுக, அதிமுக அதிரடி!"
Republic Tamil

அப்படியே இருந்தாலும் அதை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் என்னெவென்று உடன்பிறப்புக்கள் கொந்தளிக்கிறார்கள். துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவியை வேற ஒருத்தருக்கு கொடுக்க கட்சி தலைமை ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில் அது சீக்கிரமே நடக்கும் என அறிவாலய வட்டார செய்திகள் சொல்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago