Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Duraimurugan

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விவகாரத்தில் வேத மந்திரங்கள் முழங்கப்பட்ட சர்ச்சை ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்தத் திருமணத்தின் “ஆடம்பரத்தை திசை மாற்றவே அந்த மந்திர சர்ச்சையை திமுக திட்டமிட்டே கிளப்புவதாக கூறப்படுகிறது.

1995 ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம்
வேலூரில் நடந்த நிச்சயதார்த்தமாக இருக்கட்டும், தற்போது நடந்து முடிந்துள்ள திருமண விழாவாக இருக்கட்டும், இரண்டுமே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மிக மிக ஆடம்பரமாக நடத்தப்பட்டுள்ளது. 1995-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடத்திய பிரம்மாண்ட திருமணத்தை நினைவுபடுத்தும் வகையில், அதே செல்வ செழிப்போடு இந்தத் திருமணமும் வாரி இறைத்து நடத்தப்பட்டுள்ளது என வேலூர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Durai Murugan

ஆடம்பர விவாதத்தை மறைக்க ‘வேத மந்திர’ சர்ச்சை
துரைமுருகன் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கனிமவளத்துறை, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். குறிப்பாக, மணல் விவகாரத்தில் அவர் மீது அமலாக்கத்துறை இன்னும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமாக கோடிகளைக் கொட்டித் திருமணம் நடத்தியது பொதுவெளியில் தெரிந்தால், அது அமலாக்கத்துறையின் கவனத்தை மேலும் ஈர்க்கும் அல்லது எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும். எனவே, இந்த ‘ஆடம்பரப் பண விவகாரத்தை’ மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்புவதற்காகவே, திட்டமிட்டு ‘வேத மந்திரங்கள் முழங்கப்பட்ட’ விவகாரம் ஊதிப் பெரிதாக்கப்பட்டு, மடைமாற்றப்படுகிறதோ என்ற பலத்த சந்தேகமும் எழுந்துள்ளது.

இதையும் படியுங்க  "சட்டசபை ‘லைவ்’.. மெகா சீரியலை விட மோசம்!" - நெட்டிசன்களின் ரீல்ஸ் கன்டென்ட்டாக மாறிய தமிழ்நாடு அசெம்பிளி!

“அன்று கலைஞருக்கே ஓதிய வேத மந்திரங்கள்!”
இந்த விவாதங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவைச் சேர்ந்த சிலரே சமூக வலைத்தளங்களில் ஒரு பழைய வீடியோவைப் பகிர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 2016-ஆம் ஆண்டு கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இல்லத்திற்குத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பட்டாச்சாரியார்கள் வந்திருந்தனர்.

சுப.வீ-க்கு நெஞ்சு வலிக்காதா?
ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில், கலைஞர் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி நின்று பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓங்கி முழங்கினர். கலைஞர் அதனை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோவை இப்போது திமுகவினரே பகிர்ந்து, “அன்று கலைஞருக்கே வேத மந்திரங்கள் ஓதப்பட்ட போது வராத கோபமும், சுப. வீரபாண்டியன் போன்ற திராவிட இயக்கத்தவர்க்கு வராத நெஞ்சு வலியும், இன்று துரைமுருகன் வீட்டுத் திருமணத்திற்கு மட்டும் ஏன்?” என்கிற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்க  "விஜய் அண்ணன் வந்து காப்பாத்துவாரா?" ஆட்சியே Fake தான்.. தமிழகம் இருண்ட காலத்தை நோக்கிச் செல்லும் என கனிமொழி பாய்ச்சல்!
Republic Tamil

தானாகவே விலகுவாரா துரைமுருகன்?
அறிவாலய வட்டாரத்தில் கசியும் தகவல்களின்படி, இந்த விவகாரம் துரைமுருகனுக்கு ஒரு தார்மீக அழுத்தத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. அண்ணா காலத்து மாணவரணியில் தொடங்கி இன்று பொதுச்செயலாளர் என்ற உச்சக்கட்டப் பதவி வரை உயர்ந்தவர் துரைமுருகன். கட்சியின் கொள்கைக்கு மாறாகத் தனது குடும்பத் திருமணம் நடந்துவிட்டது என்ற பழியைச் சுமத்தி, அவர் மீது ஒரு தார்மீக நிர்பந்தத்தை ஏற்படுத்தி, அவரைத் தானாகவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைப்பதற்கான திரைமறைவு வேலைகள்தான் இந்தச் சர்ச்சையின் பின்னணி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago