Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மின்சார கட்டண நிர்ணயம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்களை பெற தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவை மின்சார பயன்பாடு குறித்த அறிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கின்றன. அதன் அடிப்படையில் மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படுகின்றன.

இந்த நிலையில், மின்கட்டண நிர்ணயம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தற்போது நேரடியாக கேட்கவுள்ளது. இதற்கான விதிமுறைகளையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது கருத்துக்களை tnurc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "சாப்பாடு முக்கியம் தான்… ஆனா அதைவிட சுயமரியாதை முக்கியம்! நாங்க என்ன ரோபோட்டா? – இணையத்தை உலுக்கும் டெலிவரி ஊழியரின் மாஸ் குமுறல்!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago