Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

TVK

கோஷ்டி மோதல்களும், உள்ளடி அரசியலும் எல்லா கட்சிகளிலுமே இருப்பவைதான். இந்த விஷயத்தில் திமுக அதிமுக, ஆகிய சீனியர் கட்சிகளே தடுமாறிக் கொண்டிருக்க, வளர்ந்த வரும் தவெக-வை பற்றி சொல்லவும் வேண்டுமா? குறிப்பாக அமைச்சர்களுக்கு எதிராக கட்சிக்குள் நடக்கும் களேபரங்கள் ஏராளம். போட்டி, பொறாமை ஸ்வீட் பாக்ஸ் பஞ்சாயத்து என பலப்பல ரூபங்களில் தவெக எம்எல்ஏ.,க்கள், அமைச்சர்களுக்கு எதிராக அணி திரள ஆரம்பிக்க, அமைச்சர்களின் ரகசியங்கள் பலவும வீதிக்கு வந்து கொண்டிருக்கிறது.

இப்படியாக குழம்பும் குட்டையில் மீன் பிடிக்கப் போவது யார்? போட்டி அமைச்சர்களுக்கு எதிராக எங்கெல்லாம் தவெக எம்எல்ஏக்கள் கம்பு சுற்றுகிறார்கள் என்பது குறித்து அக்கட்சியினர் மத்தியில் விசாரித்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொட்டி தீர்த்து விட்டார்கள். பொதுவாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு சீனியர் இருப்பார். அவருக்கு கீழே இருக்கும் எம்எல்ஏக்கள் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

Vijay’

ஏனென்றால் இரு தரப்புமே நீண்ட காலமாக ஒன்றாக பயணிப்பவர்கள். பரஸ்பர லாபங்களில் பங்கேற்பவர்கள். அப்படியும் அங்கு ஜூனியர்கள் சீனியர்களை முந்த முயற்சிக்கும்போது உள்ளடி வேலைகள் தொடங்கும். கடந்த ஆட்சியில் திருச்சியில் நேருவுக்கும், அம்மாவட்டை எம்எல்ஏக்களுக்கும் இடையே ஏற்பட்ட பஞ்சாயத்தை உதாரணமாக சொல்லலாம். ஆனால் தவெக-விலோ பெரும்பாலானோர் ஒரே புள்ளியில் இருந்து தான் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதனால் இங்கே அவருக்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லையே.. நேற்று வந்தவர் அமைச்சர். 25 ஆண்டுகளாக விஜய்க்காக உழைத்த நாங்கள் வெறும் எம்எல்ஏ- வா?

கூடவே எங்களுக்கு மரியாதையும் இல்லை என்று ஆத்திர, ஆதங்கத்தில் அதிக அளவில் குழிப்பறிப்பு சம்பவங்கள் நடக்க தொடங்க இருக்கின்றன. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிலிருந்து அரசியல் பிரமுகர்களும் தவெகவுக்குள் வரும்போது கேட்கவா வேண்டும்? திருச்சியை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் எம்எல்ஏவும், அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ் உடன் வெளிப்படையாகவே மோதி வருகிறார் திருவெறும்பூர் எம்எல்ஏ நாவல்பட்டு விஜி. திமுகவில் பல்லாண்டு காலம் இருந்து வந்த தன்னை விட்டுவிட்டு ரமேஷுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததால் அப்செட்டாக்கி இருக்கும் விஜி, தனக்கென திருச்சியில் ஒரு அணியை உருவாக்கி விட்டார்.

பொது இடங்களில் கூட அமைச்சர் ரமேஷ் அலட்சியப்படுத்தும் நாவல்பட்டு விஜி குழி பறிக்கும் வேலைகளையும் செய்து வருகிறார். அதேபோல் மின்சார துறை, சட்டத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை கையில் வைத்துக்கொண்டு தென்தமிழகமே என்னுடையது என்கிற ரீதியில் வலம் வரும் நிர்மல் குமாருக்கு எதிராக கம்பு சுற்றுகிறார் மதுரை கல்லாணை.

இதையும் படியுங்க  'காங்கிரஸ் ஒரு துரோகி..! இந்தியா கூட்டணியை உடைக்கும் தி.மு.க..! உதயநிதி போடும் புது ஸ்கெட்ச்..!
Republic Tamil

30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் ரசிகர் மன்றத்தில் உழைத்த தன்னை விடுத்து ஓராண்டுக்கு முன்னர் கட்சிகள் சேர்ந்த நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததையும், நிர்மல் குமார் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வருவதையும், அமைச்சரின் தூண்டுதலால் மதுரை கலெக்டர், தொடங்கி மாநகராட்சி கமிஷனர் வரை தனது பேச்சை புறக்கணித்து நிதி ஒதுக்குவதிலும் பாகுபாடு காட்டுவதையும் கல்லாணையால் ஜீரணிக்க முடியவில்லை.

நிர்மல் குமார் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கல்லணை கலந்து கொள்வதுமில்லை. இவரது நிகழ்ச்சிகளுக்கு அமைச்சரை அழைப்பதும் இல்லை. போஸ்டர்களிலும் அமைச்சர் நிர்மல் குமார் புகைப்படத்தை போடுவதில்லை. கார்த்திகேயன் மதுரை மத்தி, முஸ்தபா, சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா, உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் மகாலிங்கம் ஆகியோரும் சத்தம் இல்லாமல் அணிதிரட்டிக்க் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் வேறு வழி இல்லாமல் மதுரை தெற்கு கோபி நிர்மல் குமாரிடம் சரண்டர் ஆகி விட்டார். இத்தனைக்கும் தங்கபாண்டிக்கு கடந்த தேர்தலில் சீட்டு இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் போராடி சீட் வாங்கி கொடுத்தவர். சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை மானாமதுரையில் இளங்கோவன், சிவகங்கை குழந்தை ராணி, திருப்பத்தூரில் சீனிவாச சேதுபதி, காரைக்குடியில் டாக்டர் பிரபு என மொத்தமுமே தவெக எம்எல்ஏக்கள் தான்.

இவர்களில் பிரபுவுக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த குழந்தை ராணி அமைச்சர் பிரபுவுக்கு செயல்படுகிறார். அதேசமயம் நேரடியாக ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன், கிழக்கு தொகுதியின் விஜயபாலாஜி என இரண்டு அமைச்சர்கள். இதில் செங்கோட்டையனை எதிர்க்க எந்த எம்எல்ஏவுக்கும் தெம்பு இல்லை. இருந்த போதும் தவெவுக்கு வந்த அதிமுகவினரை செங்கோட்டையன் வளர்த்து விடுவதை பார்த்து கடுப்பில் இருக்கிறார்கள்.

மற்றொரு அமைச்சரான விஜய் பாலாஜிக்கு எதிராக அவ்வபோது காஸ்ட்லி கார் வாங்கிவிட்டார். இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஊழல் பண்ணிவிட்டார். அமைச்சரின் உடன்பிறந்த தம்பியின் அட்ராசிட்டியால் கட்சிக்கு அவப்பெயர் வாங்கி தருகிறது. அவர் அதிகாரிகளை மரியாதை இல்லாமல் அடாவடியாக பேசுகிறார் எனும் புஸ்வானங்களின் பின்னணியில் சொந்தக் கட்சி எம்எல்ஏக்களின் கைங்கரியங்கள் இருக்கின்றன.

Sengottaiyan

பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில் ஒரு வேலை அதிமுகவில் இருந்து வந்த ஜெயக்குமார் வென்றுவிட்டால் அவரை அமைச்சராக செங்கோட்டையன் காய் நகர்த்துவார் என்பதால் விஜய் பாலாஜி இப்போதே அச்சத்தில் மூழ்கத் தொடங்கிவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ மதன் ராஜா ஆகியோர் அமைச்சராக இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் விட ஸ்ரீவைவைகு ண்டம் எம்.எல்.கே சரவணன் தான் ஆய்வு என்கிற பெயரில் அலப்பறை செய்து வருகிறார். இது இரண்டு அமைச்சர்களையும் கடுப்பேற்றுவதால் எந்த நிகழ்ச்சிக்கும் அவர்கள் சரவணனை அழைப்பது இல்லை.

இதையும் படியுங்க  கள்ளச்சாரம் விவகாரத்தில் திமுகவின் உண்மை முகம் அம்பலம்.. தவெக அரசு ஒருத்தரையும் விடக்கூடாது.. அன்புமணி!

இதனால் நாம் ஏன் அமைச்சராக கூடாது? என்று நினைக்கும் சரவணன், நாடார் சமூக தலைவர்களை வைத்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். சரவணன் அமைச்சராகிவிட்டால் அது தனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று விருதுநகர் அமைச்சர் ஜெகதீஸ்வரி பயத்தில் இருக்கிறார். அதனால் அவரும் சரவணனை பலவீனமாக்கும் புகார்களை கட்சி தலைமைக்கு தட்டிவிட்டு கொண்டே இருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான தென்னரசுக்கு எதிராக உத்தரமேரூர் எம்எல்ஏ முனிரத்தினம் செயல்பட ஆரம்பித்துவிட்டார். காரணம் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியான ஸ்ரீபெரும்புதூரில் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். மாதம் 50 லட்டுகள் கொடுத்துவிட்டால் போதும் என்பதாக அங்கு கோலோச்சும் கதர் கட்சி ‘செல்வமான’ பிரமுகருடன் கைகோர்த்து விட்டாராம் அமைச்சர்.

இதனால் அமைச்சர் தென்னரசுவை தன் தொகுதியில் உள்ளேயே அனுமதிக்காத முனிரத்தினம், அமைச்சரின் ஆதரவாளர்களை பொறுப்பிலிருந்து தூக்கியடித்து தன் ஆதரவாளர்களுக்கு பொறுப்பு கொடுத்து தனி அணியை உருவாக்கி விட்டார். கோவை மாவட்ட அமைச்சர்களான விக்னேஷ் மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரை பற்றிய தகவல்களை பனையூருக்கு பக்காவாக பார்த்து செய்கிறார்கள் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனிலும், சூலூர் எம்எல்ஏ சுகுமாரும்.

இரு அமைச்சர்களில் ஒருவருக்கு பதவி போனாலும் தாங்கள் அந்த இடத்தில் அமர்ந்துவிடலாம் எனும் கணக்கே இதற்கு காரணம். இதில் சுகுமார் இரு அமைச்சர்களுக்கும் நட்பு முகம் காட்டியபடியே கூட இருந்தே குழி பறிக்கும் வேலையை செய்கிறார் என்கிறார்கள். சுனிலோ தள்ளி நின்றபடி எதிர்ப்பு அரசியல் செய்கிறார். இதுபோக இன்னும் சில மாவட்டங்களில் அமைச்சர்கள் மீது அதிர்ச்சியில் உள்ள எம்எல்ஏக்கள் அவர்களுக்கு எதிராக அணி திரளும் வகையில் அமைச்சர்கள் எங்கு எவ்வளவு கை நீட்டுகிறார்கள்? யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள்? என்னென்ன சொத்து சேர்க்கிறார்கள்? போன்ற பகீர் தகவல்களை பதிவு செய்து பிரபலமான சோசியல் மீடியா அரசியல் விமர்சகர்களிடம் கொடுத்து பேச வைக்க தயாராகி வருகிறார்கள்.

இதையும் படியுங்க  விஜய் ஆட்சி நடப்பதே 5000 கோடி மோசடி பணத்தில்தானா..? ரகசியக் கூட்டணி மர்மம் என்ன..? திமுக கேள்வி..!

அப்படி வெடிக்க தொடங்கியதுதான் அமைச்சர் கீர்த்தனா பங்களா வாங்கியதாக சொல்லப்படும் விவகாரமும். இதுபோக எம்எல்ஏக்கள் பலரும் தங்கள் லிமிட்டுக்கு உட்பட்ட தாசில்தார், ஆர்டியோ உள்ளிட்ட அதிகாரிகளை தனியாக சந்தித்து பசை பார்க்கும் வகையில் தனி ராஜ்ஜியம் செய்ய தொடங்கிவிட்டனர். உதாரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அரக்கோணம் எம்எல்ஏ காந்தி ராஜ் மட்டும்தான் அமைச்சராக இருக்கிறார்.

Aadhav Arjuna

பொறுப்பு அமைச்சர்களான விஜய் பாலாஜி, ரஞ்சித் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் மாவட்ட விஷயங்களில் தலையிடுவதில்லை என்பதால் அங்குள்ள எம்எல்ஏக்கள் தங்களுக்குள்ளாக ஏரியாக்களை பிரித்துக் கொண்டு தங்களை அமைச்சர் என்ற தோணியில் கை நீட்ட தொடங்கிவிட்டார்கள். இந்த உள்ளடி வேலைகளுக்கு எல்லாம் அடிப்படையாக சில காரணங்கள் உள்ளன. திமுக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் மாவட்டத்தில் பவர்ஃபுல்லாக இருக்கும் அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களை டெண்டர் உள்ளிட்ட விஷயங்களை கணக்கச்சிதமாக கவனித்து விடுவார்கள்.

ஆனால் தவெக ஆட்சியில் எம்எல்ஏக்களை அமைச்சர்கள் கண்டுகொள்ளாததே இது போன்ற மோதலுக்கு காரணம். மேலும் சமீபத்தில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், குளித்தலை நகர கட்சி பொறுப்பாளர்களிடம் உள்ளாட்சி தேர்தலில் சீட் பெற 15 லட்சம் ரூபாய் கேட்டு பேரம் பேசும் ஆடியோ வெளியானது. இதை ஒட்டி கடந்த வாரம் கரூர் மாவட்ட நிர்வாகிகளை பனையூருக்கு அழைத்த புஸ்ஸி ஆனந்த் விடியற்காலை 4 மணி வரை பஞ்சாயத்து பேசி அனுப்பி வைத்திருக்கிறார்.

இதை முன்வைத்து எல்லா பிரச்சனைகளுக்கும் ஆடியோ, வீடியோ லீக் ஆனால் தான் தலைமை அழைத்து பேசுமா? அப்படியானால் நாங்களும் ஆடியோ, வீடியோ லிங்க் செய்கிறோம் என்பதுதான் எம்எல்ஏக்களின் ஆத்திரம் கலந்த ஆதங்கம் என விரிவாக சொல்லி முடித்தனர். இது குறித்து தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலியிடம் கேட்டபோது, ” திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் மாவட்டங்களில் நடந்த பிரச்சனைகளை என்னால் பட்டியல் போட்டு சொல்ல முடியும். தவெகவில் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் பிரச்சனைகள் இருக்கலாம். அதை வைத்து ஒட்டுமொத்தமாக குற்றம்சொல்ல முடியாது” என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago