கட்சி முழுமையாக கைக்கு வந்த நிலையில் பாமகவை விஜய் ஸ்டைலில் மாற்றுகிற வேலைகளில் இறங்கி இருக்கிறார் அன்புமணி.
கட்சி வேலை பார்க்காத பாமக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகி வருகிறார். பாமகவில் பலமாகவும், அதிகாரம் மையமாகவும் அன்புமணி இதுவரை இருந்து வந்தாலும் கட்சி தொடர்பான முழு முடிவுகளை இதுவரை டாக்டர்.ராமதாஸ் எடுத்து வந்தார். ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க போவதாக அறிவித்த நிலையில் அன்புமணி வசம் கட்சி முழுமையாக வந்திருக்கிறது.
என்.டி.ஏ கூட்டணியில் பாமக இருந்தாலும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்கிற பரபரப்பான முடிவெடுத்தார் அன்புமணி. அடுத்து தற்போது 100 மாவட்ட செயலாளர்கள் இருக்கிற நிலையில் பல நிர்வாகிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை கையில் வைத்துக் கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள்.
ஏற்கனவே இவர்களுக்கு அன்புமணி எச்சரிக்கை கொடுத்திருந்தாலும் தைலாபுரம் வழியாக சிலர் தப்பித்துக் கொண்டிருந்தார்களாம். அதனால் தான் மட்டுமே இப்போது தலைவர் என்பதால் செயல்படாத செயலாளர்களுக்கு கல்தா கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார் அன்புமணி. கூடவே 2031 உள்ள தமிழ்நாடு முழுக்க கட்சியை ஆக்டிவாக வைக்க பாமகவில் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்கவும் முடிவு செய்து இருக்கிறாராம் அன்புமணி. கூட்டணியை பொறுத்தவரைக்கும் என்டிஏ-வுடன் பாமக நீடித்தாலும் மாநிலத்தை பொருத்தவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
