மாணவர்களுக்கு ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி அவர்களின் முன்னேற்றத்திற்கான அடுத்த ஆக்சனில் இறங்கியிருக்காராம் தனுஷ். ஜெயலலிதா அடையாளம் காட்டிய முன்னாள் மீடியா பிரபலம் அவருக்கு பக்கமபலாக இருக்கிறாராம்.
தனுஷோட அரசியல் விஜயை பார்த்து வந்ததுதான் என விமர்சனங்கள் எழுந்திருக்கிற நிலையில் தொகுதிவாரியாக நல்ல மார்க் வாங்கிய மாணவர்களுக்கு பரிசு கொடுத்த விஜய் பாணியிலேயே மாணவர்களை குறி வைத்து ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கிறாராம் தனுஷ். எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் ஏசி வசதியுடன் டியூஷன் சென்டரை தொடங்கப்போறாராம் தனுஷ்.
பொங்கலுக்கு தொடங்க திட்டம் போட்டு இருக்கிறார். அடுத்த கட்டமா 234 தொகுதிகளுக்கும் இதை விரிவுபடுத்த போகிறாராம். முதற்கட்டமாக 10, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஒவ்வொரு ட்யூஷன் சென்டரிலும், 3 ஆசிரியர்கள், ஒரு உதவியாளரை நியமிக்க போகிறாராம். அவர்களுக்கான ஊதியத்தையும் கொடுக்கப் போகிறார். அடுத்து தென் மாவட்டங்களில் இருக்கிற பெண்களை ஒருங்கிணைத்து ஒரு விழா நடத்தவும் முடிவு செஞ்சிருக்கிறார்.

அதை தேனி அல்லது புதுக்கோட்டையில் நடத்த திட்டம் போட்டு இருக்கிறார். அடுத்து ஜெயலலிதாவுடன் இருந்த ஒரு முன்னாள் எம்பி., தனுஷோட ரொம்ப நெருக்கமாக இருக்கிறாராம். தன்னை பேட்டி எடுத்த அந்த மீடியா பிரபலத்தை பின் நாட்களில் எம்பி- யாவும் ஆக்கினார் ஜெயலலிதா. ஒரு கல்வியாளராகவும் இருக்கிற ரவி பெர்ணாட்ஸை தான் இப்போது தனுஷோட வியூக வகுப்பாளராக இருப்பதாக தனுஷ் வட்டாரங்களில் ஒரு பேச்சு இருக்கிறது.
