Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

TVK

“கீழ்கட்டளை பகுதியில் தவெக சார்பாக வட்டக் கழகச் செயலாளர் தியாகராஜன் தீபாவளியை முன்னிட்டு பேனர் வைத்திருந்தார். அந்தப் பேனரை மடிப்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரும், எஸ்.ஐ அகஸ்டினும் சேர்ந்து அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி தியாகராஜன், ” ஆளுங்கட்சியான தவெக-வினரின் பேனரை அகற்றிவிட்டார்கள். ‘மற்ற கட்சிகளெல்லாம் பேனர் வைத்துள்ளார்கள், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது ஆளும் கட்சியான பேனர் மீது ஏன் இப்படி நடவடிக்கை எடுக்கிறீர்கள்?’ என இன்ஸ்பெக்டர் ரவிகுமாரிடம் முரையிட்டோம்.

அதற்கு ‘அப்படி ஒரு பேனர் இங்கு இதுவரை யாரும் வைத்ததில்லை, நீங்கள் தான் வைத்துள்ளீர்கள்’ என்கிறார். அப்படி அவர் சொல்வது முழுக்க முழுக்கத் தவறானது. அனைத்துக் கட்சிகளும் பேனர் வைத்துக் கொண்டுதான் இருக்காங்க. மூன்றாவது வருடமாக நாங்க இந்த பேனர் வைப்பது தொடர்கிறது. தொடர்ந்து அனைத்துக் கட்சிகளுக்கும் பெர்மிஷன் தருகிறார்கள். ஆளுங்கட்சியான தவெகவுக்கு மட்டும் இப்போது திடீரென இந்த பெர்மிஷனை மறுக்கிறாங்க, எதனாலன்னு தெரியல.

இதையும் படியுங்க  "ரீல்ஸ் போட்டா பத்தாது... முதலீட்டை காட்டுங்க!" - லண்டன் ட்ரிப்பை லிஸ்ட் போட்டு லாக் செய்த டி.ஆர்.பி. ராஜா!
Vijay’

யாருடைய தூண்டுதல் என்றும் தெரியவில்லை. அதை கண்டிப்பாக நிரூபிக்கணும். ஏன்னா போன வாரம் கூட கீழ்கட்டளையில் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் ரவிகுமாரை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இதை பண்ணிட்டு வருகிறார். இதையே தொடர்ந்து அவர் நீடித்திருந்தார் என்றால் கண்டிப்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், தலைவருடைய பெர்மிஷன், கழகத்தினுடைய பொதுச்செயலாளர், முதலமைச்சருடைய பெர்மிஷன், கழகத்தின் பொதுச்செயலாளர் எங்க மாண்புமிகு அமைச்சர் அண்ணன் புஸ்ஸி ஆனந்த் அவர்களுடைய பெர்மிஷனோடு மிக பிரம்மாண்டமாக காவல்துறை இன்ஸ்பெக்டர் ரவிகுமார் அவர்களுக்கு எதிராக கண்டிப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இங்கு தவெகவின் ஒரு பேனரை மட்டும் தான் எடுத்திருக்காங்க. ஆனா மற்ற கட்சிகளுடைய நிறைய பேனர் இருக்கு. தொடர்ந்து எல்லா கட்சி பேனருக்கும் அனுமதி கொடுத்திருக்காரு. அதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு. இப்போ பல்லாவரத்துக்கு நாங்க காலையில போனோம். பல்லாவரத்துல இருந்து கீழ்கட்டளை வரைக்கும், பல்லாவரத்துல இருந்து பழைய பல்லாவரம் வரைக்கும் அனைத்து திமுக மற்றும் அனைத்துக் கட்சியினுடைய பேனரும் இருக்கு. சட்டம் இருக்கு என இவர் சொல்கிறார்.

இதையும் படியுங்க  பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..! முதல்வர் பார்வைக்கு போகும் முன்பே லீக்காகும் உளவு அறிக்கை.. 3 பேரின் அட்டூழியம்..!

இதோ பாருங்க, கீழ்கட்டளை காவல் நிலையம் எதிரிலேயே… காவல் நிலையம் எதிரிலேயே பட்டாசு கடையில 6 பேனர் ரோட்டோட நடுவுல, நடு ரோட்டிலேயே! அதே அப்புறம் மேடவாக்கம் மெயின் ரோட்டுல, நடு ரோட்டுல, மேடவாக்கம் மெயின் ரோடு பட்டாசு கடைக்கு பெர்மிஷன் கொடுத்திருக்காரு. இது எந்த கோர்ட்ல ஆர்டர் வாங்கிட்டு வந்தாங்கன்னு தெரியல. அவர் கொடுத்திருக்காரு. அதையும் நாங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர் எதுக்காக இப்படி தவெக-வுக்கு மட்டும் எதிராக செயல்பாடுகிறார்னே தெரியல. தலைவர் லஞ்சத்தை ஒழிக்கணும் என்கிறார். அதுதான் குறிக்கோள்னு சொல்றாரு. அதை இந்த அதிகாரிகள் வந்து ஏத்துக்க மாட்டேங்கிறாங்க. தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எவ்வளவு பிரம்மாண்டமா லஞ்சத்தை ஒழிக்கிறாரு, அப்படின்றதை கவர்மெண்ட் அதிகாரிகள் அப்படியே திணறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டதுல, எத்தனை மதுபானக் கடையை தவறான முறையில நடத்துறாங்க, இரவுல நடத்துறாங்க, அப்புறம் மூன்று சீட்டு ஆட்டம் நடக்குது. ராத்திரி நடக்குது. எவ்வளவு நடக்குது!

இதையும் படியுங்க  கரண்ட் இல்லனா என்ன.. நெருப்பை கையில் எடுத்த மக்கள்!சீர்காழியை உலுக்கிய நள்ளிரவு போராட்டம்!

அதெற்கெல்லாம் நடவடிக்கை எடுக்காம… இதெல்லாம் நடக்குது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேனர்னா அதை அகற்ற அவ்வளவு ஏன் இன்ட்ரஸ்ட் காட்டுறாரு இன்ஸ்பெக்டர் ரவிகுமார்? அவருக்கு பக்கபலமா சப் இன்ஸ்பெக்டர் அகஸ்டினும் சேர்ந்துதான் இதை செய்கிறார்கள். இருவரும் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் பேனரை அகற்றுவதற்கு அவ்வளவு ஏன் இன்ட்ரஸ்ட் காட்டுகிறார்கள்?

மடிப்பாக்கம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டினை கண்டிக்கிறோம்” என கடும் விரக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago