Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு குறி வைத்திருக்க தவெக ஆட்சி மேலிடம் அடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இப்போது இதைப்பற்றிய விசாரணையும் தொடங்கி இருக்கிறது.

ஊழல் வழக்கில் இப்போது சிறையில் இருக்கிற முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்தி இருக்கிறது. அடுத்து கைதாக போகிறது நேருவா? என்கிற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிற சூழ்நிலையில் வீத லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, உதயநிதி மீது பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறார்.

Annamalai

உதயநிதி பேரில் இருக்கிற அறக்கட்டளையின் முகவரியும், ஒரு பிரபல ஸ்டீல் நிறுவனத்தின் முகவரியும் ஒன்றாக இருக்கிறது என்றும் அந்த நிறுவனம் திமுக ஆட்சியில் ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருக்கிறது. இந்த தொடர்புகளை தவெக அரசு வெளிப்படையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.

இதையும் படியுங்க  திருச்சி கிழக்கு 'மிஷன்': 'ஜெ. பாணியில்' திரிஷா என்ட்ரி? பின்னணியில் அமித்ஷா - விஜய் ரகசிய டீல் என்ன?
Udhayanidhi

திமுக ஆட்சியிலேயே அண்ணாமலை இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அப்போது உதயநிதி சார்பாக ”ரெண்டு நிறுவனமும் வேற வேற. அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்றாரு” என மறுக்கப்பட்டது. இப்போது அதே குற்றச்சாட்டை மறுபடியும் அண்ணாமலை தவேக அரசிடம் முன் வைத்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் அண்ணாமலை குறிப்பிடுகிற ஸ்டீல் கம்பெனி இப்போது டெல்லியில் இருக்கிற ஒரு பாஜக விவிஐபிக்கு நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. அவருடைய ஒப்புதல் பெயரில் அந்த நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனம் வாங்கிட்டதாகவும் தெரிய வந்திருக்கிறதாம். ஆனாலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago