Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Open Letter

[Republic – தமிழுக்கு வந்த மடல் இங்கு அப்படியே ]

அன்புள்ள தலைமைக்கு திருப்பத்தூர் திமுக கடைசி வரிசை தொண்டனின் அன்பு கலந்த வணக்கங்கள் 

நான் தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகிறவன் இல்லை. களத்தில் நிற்கும் சாதாரண தொண்டன். தவெக ஆட்சியில் இன்று நடப்பதைப் பார்க்கும்போது நமக்கான பாடமும் எச்சரிக்கையும் அதில் இருப்பதாகத் தோன்றுகிறது. அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இன்று முதல்வர் விஜய் இக்கட்டில் நிற்கிறார். அவரிடம் 109 எம்எல்ஏக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் தனிப்பெரும்பான்மை இல்லை. ஆட்சியைக் காப்பாற்ற பாமகவை உள்ளே இழுக்கப் பார்க்கிறார். பாமக வந்தால் வெளியேறுவோம் என்று திருமாவளவனும் வன்னி அரசும் வெளிப்படையாக மிரட்டுகிறார்கள்.

ஆனால் இதற்குப் பின்னால் இன்னொரு பெரிய கணக்கு ஓடுகிறது.

விஜய் முதற்கொண்டு கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது மாற்று சமூக மக்களிடம் வேறுவிதமான பார்வையை உருவாக்கியிருக்கிறது. வடக்கே வன்னியர், மேற்கே கவுண்டர், டெல்டாவில் முக்குலத்தோர் – யாதவர், தெற்கே நாடார் – வேளாளர் – முத்தரையர் என பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்கள் மனதில் “இது நமக்கான ஆட்சி இல்லையோ?” என்ற அதிருப்தி மெல்லப் பரவியிருக்கிறது.

இதையும் படியுங்க  Even for a dual-motor toy, folks in search of more worth must

இதை நன்கு அறிந்த தவெகவில் உள்ள ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், பாஜக மேலிட உத்தரவின் பேரில் ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று பேசப்படுகிறது. விசிகவை வெளியேற்றிவிட்டு, பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டு வந்து ஆட்சியில் பங்கு கொடுத்தால், பிற்படுத்தப்பட்ட மக்களின் அதிருப்தி மெல்ல மறையும் என்பது அவர்கள் கணக்கு. அதாவது, தலித் முத்திரையை மறைக்க பாமக முகமூடியை மாட்டப் பார்க்கிறார்கள்!

தலைமையே, இங்குதான் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நம்மிடம் ஏற்கனவே தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் உறுதியான வாக்கு வங்கி உள்ளது. அதுவே போதும் நமக்கு.

இந்த அடிப்படை வாக்கு வங்கியோடு, இப்போது நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொண்டால், நமக்கு வெற்றிக்கு வேறு என்ன வேண்டும்? இதற்காக விசிக என்ற அடையாளச் சுமையை நாம் ஏன் மீண்டும் தூக்க வேண்டும்?

நீண்ட காலமாக விசிக நம்மோடு இருந்ததால், திமுக தலித்துகளுக்கு மட்டுமான கட்சி என்ற எண்ணம் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதனால் நாம் எத்தனை தேர்தல்களில் வட மாவட்டங்களில், மேற்கு மாவட்டங்களில், டெல்டாவில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

இதையும் படியுங்க  விஜய் செய்த மாபெரும் தவறு… சிக்க வைத்த காங்கிரஸ்.. ஆளுநர் வைத்த செக்..!

இப்போது விசிக வெளியேறியதால், திமுக பற்றிய அந்தப் பார்வை மெல்ல மாறி வருகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் நம்மை நம்பிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது நாம் போராடிப் பெற்ற இரண்டாவது வாய்ப்பு.

ஆனால் தவெக செய்யும் தந்திரத்தால் வேறுவழியின்றி விசிக மீண்டும் நம் பக்கம் தாவப் பார்க்கும். திருமா, வன்னியரசு பேச்சில் அதற்கான அறிகுறி தெரிகிறது.

என் பணிவான வேண்டுகோள் ஒன்றுதான்: தயவுசெய்து விசிகவை மீண்டும் சேர்க்காதீர்கள்.

விசிக பெயரளவில் வந்தாலும் ஓட்டு வரப்போவதில்லை. (இந்த உண்மையை நடந்து முடிந்த இரண்டு இடைத்தேர்தலிலேயே காட்டிவிட்டது) ஆனால் அவர்கள் வந்த ஒரே செய்தி போதும், நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள் மீண்டும் நம்மைவிட்டு விலகிவிடுவார்கள். நம்மிடமுள்ள தாழ்த்தப்பட்ட ,இஸ்லாமிய, கிருத்துவ, வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொண்டு, பிற்படுத்தப்பட்டவர்களை அரவணைப்பதுதான் நமக்கான சரியான பாதை.

தவெக தன் அதிருப்தியை மறைக்க பாமகவைத் தேடட்டும். நாம் நம் நம்பிக்கையைக் காக்க விசிக மாயையிலிருந்து விலகி நிற்போம்.

இதையும் படியுங்க  "விஜய்யைச் சுற்றி 4 ‘பவர் சென்டர்கள்’! – அ.தி.மு.க.வின் அதிரடி அட்டாக்… மெளனம் கலைப்பாரா முதல்வர்..?

இப்படிக்கு, – கடைசி வரிசை தொண்டன்

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago