Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அதிமுக இரண்டு பட்டு போய்க்கொண்டு இருக்கும் நிலையில் டெல்லி பாஜகவின் முழு ஆதரவு எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இருப்பதாகவும்,, எடப்பாடி பழனிசாமி தரப்பை டெல்லி தலைமை கைவிட்டு விட்டது என்கிற தகவல் ரத்தத்தின் ரத்தங்களை குழப்பியடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் படுதோல்வி, பாஜகவுக்கு கிடைத்த ஒரே ஒரு இடம் என டெல்லி பாஜக கடும் அதிருப்தியில் உள்ளது. குறிப்பாக அமித்ஷா ரொம்பவே கடுப்பில் இருக்கிறார்.இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் தான் காரணம் என அமிஷா நினைக்கிறாராம். பாஜக கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் கடினமான தொகுதிகளை ஒதுக்கியது, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதே அமித் ஷாவின் திட்டம்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதம் காட்டியதால் பாஜக அப்செட்டில் இருந்தது. அதேசமயம் எப்போதுமே எடப்பாடியை தாண்டி கட்சி தலைமையுடன் நெருக்கமாக இருக்கிற எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர் மூலமாக அதிமுக எம்.எல்.ஏ-க்களின் மனநிலையை சொல்லி எடப்பாடி பழனிச்சாமி நிலைப்பாட்டையும் அமித் ஷாவுக்கு தகவலாக அனுப்பியுள்ளார். இதனை அடுத்தே எடப்பாடி பழனிசாமியை பாஜக கைவிட்டதாகவும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தின் முன்னெடுப்புகளுக்கு பாஜக துணை நிற்பதாகவும் தகவல் அனுப்பி இருக்கிறதாம் அமித் ஷா தரப்பு.

இதையும் படியுங்க  துடிதுடித்த பதவி மோகம்..! எடப்பாடிக்கு ப்ளோர் டெஸ்ட்..! மீள்வாரா புரட்சி தமிழர்..?

இதன் பின்னணியில் தான் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி போர்க்கொடி தூக்கியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களையும் தன் பக்கம் இழுக்கிற வேலைகளை எஸ்.பி.வேலுமணி தொடங்கி விட்டதாகவும், பொது குழுவில் எடப்பாடியின் பதவியைப் பறிக்கவும், ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கும் வேலைகளையும் முடுக்கி விட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago