Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Thirumavalavan

இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் கணக்குகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளன. குறிப்பாக கூட்டணியில் திருமாவளவன் இருந்தும் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் தவெக ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எஸ்ஐஆர் விவகாரம் தொடங்கி பல்வேறு அரசியல் பிரச்சனைகளிலும், தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடுகள் தொடர்பாக திருமாவளவன் தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

ஒருபுறம் கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், மறுபுறம் தவெக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தின. இதற்கிடையே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சி தலைவர்களை பயன்படுத்தி வாக்குகளை திரட்டுவதற்கு பதிலாக தவெக தனது சொந்த அரசியல் பலத்தை முன்னிறுத்துவதில் கவனம் செலுத்தியதாக தெரிகிறது.

vck

மதுராந்தகம் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற திருமாவளவன் அப்போது அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றது. அந்த பேட்டியை பார்த்த தவெக தலைமை, தாராபுரம் தொகுதியில் அவரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்ததா? என்று கேள்வி எழுகிறது. ஏனென்றால், தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை முன்னிறுத்துவது என்பது வெறும் வாக்கு சேகரிப்பு மட்டுமல்ல. அது கூட்டணியின் ஒற்றுமையையும், தலைவர்களுக்கு இடையிலான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விஷயம். ஆனால் இந்த இடைத்தேர்தலில் திருமாவளவனுக்கு அந்த அளவிலான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதுதான் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

இதையும் படியுங்க  “விஜய்க்கு இப்படி ஒரு பாராட்டா? சமுத்திரகனி அதிரடி பேச்சு

இதற்கு பின்னால் விஜயின் அரசியல் கணக்கு இருக்கிறதா என்று கேள்வியும் எழுகிறது. திருமாவளவன் திமுகவுடன் அரசியல் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் விவாதங்களும் எதிர்காலத்தில் கூட்டணி மாறுவதற்கான வாய்ப்புகள் குறித்த சந்தேகங்களும் தவெக தலைமையின் அரசியல் கணக்கில் இடம் பெற்றிருக்கலாம்.

கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவர் தேர்தல் நேரத்தில் மட்டும் ஆதரவளித்துவிட்டு மற்ற நேரங்களில் கூட்டணியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கிறார் என்ற எண்ணம் தலைமைக்கு ஏற்பட்டால் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அந்த கட்சி மறுபரிசீலனை செய்யும். அந்த வகையில் திருமாவளவனை பிரச்சாரத்தில் முழுமையாக பயன்படுத்தாதது தவெக தலைமையின் அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்பதே இப்போது முன்வைக்கப்படும் கருத்து.

Thirumavalavan

இதில் இன்னொரு முக்கியமான அரசியல் கணக்கும் இருக்கிறது. தவெக தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று தனக்கென வலுவான வாக்கு வங்கியை உருவாக்கிவிட்டால் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் அரசியல் முக்கியத்துவம் குறைய வாய்ப்பு உள்ளது. அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் குறைந்துவிட்டால் எதிர்காலத்தில் அதிகார பகிர்வு மற்றும் அரசியல் பேரம் பேசும் வாய்ப்புகளிலும் மாற்றம் ஏற்படலாம். இதனால் தவெகவின் வெற்றி தங்களது அரசியல் எதிர்காலத்தை பாதிக்குமா? என்ற கணக்கு கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறதா என்று கேள்வியும் எழுகிறது. மேலும் இடைத்தேர்தலில் தவெகவின் வெற்றியை திருமாவளவன் விரும்பவில்லை என்றும் இது தொடர்பாக உளவுத்துறை அறிக்கை அளித்ததாகவும் கூறப்படும் தகவல்களும் அரசியல் விவாதத்தில் இடம் பெறுகின்றன.

இதையும் படியுங்க  தவெக அரசின் 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு இடைக்காலத் தடை வருமா? நாளை நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்!"

கூட்டணியில் ஒரு கட்சி இருக்கிறது என்பதற்காக அதன் தலைவருக்கு எல்லா நேரங்களிலும் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. தேர்தல் நேரத்தில் யாரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்? யாரை முன்னிறுத்த வேண்டும்? யாருடைய செல்வாக்கை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொரு கட்சியும் தனது அரசியல் கணக்கின் அடிப்படையில்தான் முடிவு செய்யும். அந்த வகையில் திருமாவளவனை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்வி இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Vijay’

இரண்டு இடைத்தேர்தலிலும் தவெக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அது கூட்டணி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கத்தான் தற்போது விரும்புகிறதா? ஆனால் தங்களுக்கு எதிராக கூட்டணியில் உள்ள கட்சிகள் இனியும் தொடர்ந்து பேசினால் அது திருமாவளவனாக இருந்தாலும் பதிலடி மட்டுமல்ல கூட்டணியில் இருந்து வெளியேற்றினாலும் ஆச்சரியம் இல்லை. இந்த முடிவை முதல்வர் விஜய் எடுப்பார் என்கின்றனர் விவரமறிந்த வட்டாரங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago