Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

eps

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்வியை ஆதிமுக சந்தித்து வருகிறது. இபிஎக்கு எதிராக ஏற்கனவே அதிமுக மூத்த தலைவர்கள் போர்கொடி தூக்கி இருக்கக்கூடிய நிலையில் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவின் கோட்டை, அசைக்கவே முடியாது என எதிர்பார்த்த களத்தில் மூன்றாவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல கடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்ற வாக்குகளை விட கிட்டத்தட்ட 20,000 30,000 வாக்குகள் குறைந்திருக்கிறது. ஏற்கனவே அதிமுக தலைமையில் இருக்கக்கூடிய மூத்த நிர்வாகிகள் இபிஎஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து வரும் நிலையில் அதிமுகவிற்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியிருக்கிறது.

ஏனென்றால் இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பகுதிகள். 10 தேர்தல் நடைபெற்றிருக்கிறது என்றால் அதில் ஐந்து தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக கடைசியாக நடைபெற்ற 2026 பொதுத்தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும் கூட இந்த தொகுதிகளில் எல்லாம் அதிமுக வெற்றி பெற்றது. குறிப்பாக தாராபுரம் தொகுதியை எடுத்துக்கொண்டால் சுமார் 15000 வாக்குகள் வாக்குகளில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

EPS

எனவே செறிவாக இருக்கக்கூடிய அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட பகுதியிலேயே தற்போது அவர்கள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது அக்கட்சியின் எதிர்காலம் என்ன என்பது குறித்த பெரும் கேள்வியை எழுப்ப தொடங்கியிருக்கின்றது. இதைத்தான் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் கூடி தொடர்ந்து அதிமுக தோல்வி பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்படியே போனால் எப்படி?
அதிமுக எப்போதுதான் வெற்றி பாதையை நோக்கி பயணிப்பது என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதையும் படியுங்க  "தவெகவில் ஐக்கியமானார் அதிமுக முக்கிய புள்ளி… தாராபுரத்தில் அதிரடி திருப்பம்..!

அதாவது வெற்றி தோல்வி என்பது இவ்வளவு பெரிய இயக்கத்திற்கு சகஜம்தான். ஆனால், தொடர்ந்து 10 தேர்தல்களுக்கும் மேலாக நாம் தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 2019ல் தொடங்கி தற்போதுவரை தோல்வி மட்டும்தான் இருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி. 2019க்கு பிறகு வந்த உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி, 2021ல் வந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி, அதன் பிறகு வந்த உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பாலும் தோல்வி, 2024ல் வந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, 2026ல் வந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி. இந்த 2021 டு 2026 இதற்கிடையில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் தோல்வி.

இப்படி அதிமுகவின் வரலாற்றில் இல்லாத வகையில் தொடர்ந்து தோல்விகளே இருக்கிறது. எனவே தோல்விகளை சரி செய்யக்கூடிய வகையில் இந்த தோல்விகளுக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து நாம் ஆராய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் இபிஎஸ் அது குறித்தெல்லாம் நாம் விசாரிக்க முடியாது பேச முடியாது என்று மறுத்துவிட்டதாக அன்றைக்கு அவர்கள் பேட்டி கொடுத்தார்கள். ஆனால் இந்த இடைத்தேர்தலிலும் தோல்வி அடைந்திருப்பது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பி
இருக்கின்றது.

இதையும் படியுங்க  "அதிமுக வேட்பாளரிடம் ரூ.4.5 கோடி சுருட்டலா? தவெக-வில் இணைந்த விஜயபாஸ்கருக்குப் பாய்கிறது விசாரணை!

இபிஎஸ் தலைமை மீதான விமர்சனத்திற்கு இன்னும் வலுசேர்க்க கூடிய வகையில் தான் இந்த தோல்வி அமைந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து வெற்றி பெற்ற ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கக்கூடிய நிலையில மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் போன்றவர்கள் தெரிவித்து வரக்கூடிய நிலையில இந்த தேர்தல் வெற்றி மூலம் அதிமுகவில் விரக்தி மனநிலையில் இருக்கக்கூடியவர்கள் ஏன் செல்லக்கூடாது?என்று அவர்கள் தவெகவை நோக்கி செல்வதற்கும் அதிமுகவில் இருந்து வெளியேறுவதற்கும் காரணமான ஒரு தேர்தல் முடிவாக இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகிறது.

eps

எனவே இபிஎஸ் அதிமுகவில் எங்கே தவறு நடைபெறுகிறது? எதனால் கட்சி பலவீனப்பட்டு கிடக்கிறது? மீண்டும் அதிமுகவை பழைய அதிமுக போல மீட்டு கொண்டு வருவதற்கு என்ன செயல்பாடுகள் இருக்கிறது என்பதை ஆராய வேண்டும் என்பதுதான் அதிமுக நிர்வாகிகள் சொல்லக்கூடிய தகவலாக இருக்கின்றது.

அதிமுக நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. 21ல் தோல்வி அடைந்திருந்தாலும் ஒரு கௌரவமான வெற்றி என்ற அடிப்படையிலே 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார்கள். 2020லே நாடாளுமன்ற தேர்தலிலே பெரும்பாலும் அவர்கள் வெற்றி வெற்றி பெறவில்லை. முழுமையான தோல்வி என்றாலும் சில நாடாளுமன்ற தொகுதிகளில் அவர்கள் நல்ல வாக்குகளை பெற்றிருந்தார்கள். 2026-ஐ நாம் பார்க்கும் போது, தொடர்ந்து தோல்விதான்.

இதையும் படியுங்க  "வரலாற்றிலேயே மோசமான CM விஜய்.. இது அம்மா ஆட்சி இல்ல, வெறும் சும்மா ஆட்சி!" - ஓ.எஸ்.மணியன் ஆவேசம்!

அதாவது 72 இடங்களுக்கு மேல் பெற்றிருந்த இடத்தில், 47 ஆக குறைந்தது. அந்த எண்ணிக்கை 41 ஆக குறைந்திருக்கக்கூடிய நிலையிலே, அது மேலும் சரிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். எனவே பல முன்னாள் அமைச்சர்கள், பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் அதிமுகவில் இருந்து விலகி வந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில் அதிமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இபிஎஸ் வெளிப்படையாக மனம் திறந்து தோல்விக்கான காரணங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் விரிவாக அலச வேண்டும்.

அப்போதுதான் இந்த தோல்விகளுக்கெல்லாம் என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து அவர்கள் வெற்றி பாதியை நோக்கி பயணிக்க முடியும் என்று அதிமுகவில் பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் காலத்தில் இருந்து இருக்கக்கூடிய பல தலைவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago