Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

adhav

“முதலமைச்சர் விஜய் ஆட்சியில் லஞ்சமே இல்லை. ஊழலை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம்” என்று ஒவ்வொரு மேடையிலும் தொண்டைத்தண்ணீர் வற்றும் அளவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவர் அர்ஜுனா பேசி வருகிறார். ஆனால், அவரது கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறையிலேயே நிலைமை தலைகீழாக இருப்பதாக தற்போது பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டிடப் பிரிவின் செயற்பொறியாளராக, அதாவது எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியராக கௌதமன் என்பவர் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இவர் திருவண்ணாமலையில் பணியாற்றி வந்தார்.

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கம்
திருவண்ணாமலையில் பணியாற்றிய காலகட்டத்தில், அப்போது திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வவேலுவுக்கு கௌதமன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். உயரதிகாரிகள் கூட அவரைச் சந்தித்துப் பணிகளை கவனித்து வந்தனர்.

குறிப்பாக, வேலு குடும்பத்துக்கு சொந்தமான கல்லூரி கட்டிடப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கௌதமன் முன்னின்று கவனித்ததாகவும் கூறப்படுகிறது.

Aadhav Arjuna

இப்படிப்பட்ட பின்னணி கொண்ட அதிகாரியான கௌதமன், தவெகவின் முக்கிய அமைச்சர் ஒருவரை சந்தித்து “கவனித்துக்” கொண்டுதான் கடலூருக்கு பணியிட மாற்றம் பெற்றதாக பொதுப்பணித்துறைக்குள்ளேயே பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் படியுங்க  "யாரும் இங்க வந்துடாதீங்க..! ஆதவ் அர்ஜுனாவின் & கோ-வுக்கு மொத்த போன பவர்..? முதல்வர் அதிரடி உத்தரவு!

12 ஆண்டுகள் கடலூரிலேயே பணியாற்றியவர்
கௌதமன் ஏற்கனவே கடலூரில் உதவிப் பொறியாளராக 8 ஆண்டுகளும், சப்-டிவிஷன் ஆபீசராக 4 ஆண்டுகளும் என மொத்தம் 12 ஆண்டுகள் கடலூரிலேயே பணியாற்றியவர். தற்போது செயற்பொறியாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், கடலூர் விருந்தினர் மாளிகை அருகே உள்ள பழைய பொறியாளர் குடியிருப்பு ஒன்று சீரமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான டெண்டர் விடப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதேபோல், அவரது அலுவலகத்தை புதுப்பிப்பதற்காக சுமார் ரூ.10 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் டெண்டர் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ரூ.200 கோடி பழைய பணிகளில் கமிஷன்
கடந்த ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அந்தப் பணிகளை மேற்கொண்ட பழைய ஒப்பந்ததாரர்களை அழைத்து, தனக்கு ஒரு சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என மிரட்டி பணம் பெற்றதாகவும் கௌதமன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தற்போது புதிய திட்டங்களுக்காக புதிய ஒப்பந்ததாரர்களை அழைத்து வரவழைத்து, அவர்களுக்கு இடையே டெண்டர்களைப் பிரித்து வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது துறை சார்பில் விளக்கம் வெளியாகவில்லை.

இதையும் படியுங்க  "‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’… உருக்க வீடியோ வெளியிட்ட நிர்வாகி மகேந்திரன் உயிரிழப்பு!"

டெண்டரில் புதிய டெக்னிக்?
டெண்டர் எடுக்கும் விவகாரத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. டெண்டர் எடுக்க வரும் ஒப்பந்ததாரர்கள் குறைந்த தொகையில், அதாவது “மைனஸ்” கோட் செய்து டெண்டர் வழங்கி வருவதாகவும், ஆனால் அதற்கு பதிலாக குறிப்பிட்ட முறையில் தொகையைச் சேர்த்து டெண்டர் கொடுக்குமாறு செயற்பொறியாளர் கௌதமன் அறிவுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த நடைமுறையை ஒப்பந்ததாரர்களுக்கே அவர் கற்றுக்கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

Republic Tamil

அமைச்சருக்கு தெரியாமல் நடக்குமா?
இவ்வளவு குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவர் அர்ஜுனாவுக்கு தெரியாமல் இவை அனைத்தும் நடக்குமா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

“எங்கள் ஆட்சியில் லஞ்சமே இல்லை” என்று அமைச்சர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அவரது கட்டுப்பாட்டில் உள்ள துறையிலேயே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது அரசியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.

“லஞ்சமே இல்லை என்று பேசுவதெல்லாம் வெறும் மேடைப் பேச்சுதானா?” என்று பொதுப்பணித்துறையின் உயரதிகாரிகளே கேள்வி எழுப்புகின்றனர். கடலூர் பொதுப்பணித்துறையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்படுமா? சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அமைச்சர் ஆதவர் அர்ஜுனா இதற்கு விளக்கம் அளிப்பாரா? என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்விகளாக உள்ளன.

இதையும் படியுங்க  ₹5000 கோடி டாஸ்மாக் டார்கெட்.. போதை ஒழிப்பு வெறும் உருட்டா? CM விஜயை வெளுத்த திமுக MLA மார்க்கண்டேயன்!"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago