Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay

தமிழ்நாட்டில் இரண்டு தொகுதி இடைத்தேர்தல்கள் மாதிரியே புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கு வரும் அக்டோபர் ஆறாம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார். அவர் மீதும், அவருடைய அப்பா மீதும் சிபிஐ வழக்கு இருந்தது. இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் சிபிஐ மறுபடியும் மேல்முறையீடு செய்யும் திட்டத்திக் இருக்கிறது.

இந்தப் பின்னணியில தான் அசோக் ஆனந்தை வேட்பாளர் ஆக்கி இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. காங்கிரஸ் கட்சி சார்பில் விநாயகம் இந்த தொகுதியோட வேட்பாளராக களமிறங்குகிறார். விஜய் ஆதரவு பெற்ற சுயட்சையாக எம்எல்ஏ நேரு இருக்கிறார். அவரது மச்சான் இந்த விநாயகம். தமிழக வெற்றிக்கழகம்- காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமில்லை புதுச்சேரியிலும் இருக்கிறது.

vijay Rangasamy

இந்த நிலையில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புதுச்சேரிக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் ஆசைப்படுகிறது. ஆனால் விஜயின் நெடுநாள் நண்பரான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியோ ”இந்த சின்ன இடைத்தேர்தலுக்கு போய் எதுக்குயா விஜய் வரணும்? அவர் பேசாம ரெஸ்ட் எடுக்கட்டும். இதெல்லாம் அவ்வளவு ஒர்த் கிடையாது” என ரகசியமாக தூது விட்டு இருக்கிறார். ஏனென்றால் விஜய் வராமல் இருந்தால்தான் என்.ஆர்.காங்கிரஸ் ஜெயிக்க முடியும் என்பது ரங்கசாமியின் கணக்கு.

இதையும் படியுங்க  எனக்கும் கொஞ்சம் காசு தாங்க!" - இடைத்தேர்தல் செலவுக்கு ஆன்லைனில் மக்களிடம் கையேந்தும் சீமான்!

ஆனால் பாஜக நிர்வாகிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்றால் எதிர்கட்சி ஆட்களோடு ஜாலியாக பழகுகிற ரங்கசாமி கூட்டணி கட்சியான எங்களை மதிக்கவே மாட்டேங்கிறாரு என கடுப்பில் புலம்பி கொண்டு இருக்கிறார்கள். பாஜகாவில் இருக்கிற அவரது பிசினஸ் பார்ட்னர்கள் ஒரு சில பேரை மட்டும்தான் பக்கத்தில் வைத்டிருக்கிறார்.

அவர்களிடம் மட்டும்தான் நெருக்கமாக இருக்கிறார். ஆனால் பாஜகவை அவர் ஒரு பொருட்டாவே மதிக்கிறதே இல்லை என புலம்புகிறார்கள். யார் என்ன புலம்பி கொண்டு இருந்தாலும் இந்த இடைத்தேர்தலில் புதுச்சேரி மக்கள்தான் ஹாப்பி அண்ணாச்சி என்கிற மூடில் இருக்கப் போகிறார்கள். ஏனென்றால், இந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ₹5000 என காங்கிரஸும், அதே ₹5000 நாங்களும் தருகிறோம் என என்.ஆர்.காங்கிரஸும் முடிவு செய்து வைத்திருப்பதால் அந்த தொகுதி மக்களுக்கு ஒரு ஓட்டுக்கு ₹10,000 ஜாக்பாட் அடிக்க போகிறது என்கிறார்கள்.

-பி.சக்திவேல், புதுச்சேரி செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago