Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil mahesh

அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அன்பில் மகேஷ் மீது அதிருப்தியில் ஸ்டாலின், உதயநிதி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி முதல்வர் விஜய்க்கும், போலீசாருக்கும் வேறு ஒரு தகவல் போயிருக்கிறதாம். “அன்பில் மகேஷுக்கு எதிரான ஆக்‌ஷன் தொடங்குகிற போதே முதல்வர் விஜய்க்கு ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளது. அதில் அன்பில் மகேஷுக்கு திமுக தலைமை ஆதரவாக இல்லை என சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால் பார்ட்டி ஃபண்ட் எனக் கூறி அன்பில் மகேஷ் வசூலித்த பணம் அனைத்தையும் அவரே எடுத்துக் கொண்டுள்ளார்.

Anbil mahesh

உதயநிதியையும், அன்பில் மகேஷ் ஏமாற்றி விட்டார். தேர்தல் நேரத்தில் என்னிடம் பணமே இல்லை எனச் சொல்லியே உதயநிதியிடம் தேர்தல் செலவுக்காக பணமும் வாங்கி இருக்கிறார். ஆனால் இப்படி வசூல் செய்த விவகாரம் ஒவ்வொன்றாக வெளியே வர வர உதயநிதியும் ரொம்பவே அதிர்ச்சியாகி இருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலினும், “அன்பில் மகேஷ் இவ்வளவு செஞ்சிருக்காரா? என ரொம்பவே கோபத்தில் இருக்கிறார் ” என்கிறார்கள்.

இதையும் படியுங்க  செந்தில் பாலாஜியை விசாரிக்க கூடாது..! பாஜக சப்போர்ட்..? திமுக ரகசிய உறவால் கவர்னர் பிடிவாதம்..?!
Stalin

திமுக தரப்பினர் இதுகுறித்து, “அன்பில் மகேஷ் அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் மாறுதல் உட்பட விவகாரங்களுக்கு மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் யார் வந்து கேட்டாலும், “சட்டப்படி- விதிகளின்படி- கவுன்சிலிங்படிதான்” எல்லாமே நடக்குது எனச் சொல்வார். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளிடம் வசூலிக்க வெளி ஆட்களை வைத்திருந்தாட் என தலைமைக்கு பலரும் புகார் சொன்னார்கள். ஆனால் அப்போது கட்சித் தலைமை எதுவும் செய்யவில்லை. கண்டுகொள்ளவும் இல்லை. இப்போது நமக்கு வந்த புகார் எல்லாமே உண்மை என தெரிந்ததால்தான் ஸ்டாலினும், உதயநிதியும் அதிர்ச்சியாகி விட்டார்கள். என்கிறார்கள்.

Udhayanidhi

வலுவான வாக்குமூலங்கள், அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் விவரங்கள், திமுக தலைமையின் அதிருப்தி, இதெல்லாத்தையும் கணக்கு போட்டுதான் எந்த நேரத்திலும் அன்பில் மகேஷ் கைது செய்யப்படலாம் என்கிறார்கள்.

அத்துடன், அன்பில் மகேஷுக்கு எதிராக விஜிலென்ஸும் களமிறங்கி இருக்கிறதாம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கையும் அன்பில் மகேஷுக்கு எதிராக விஜிலென்ஸ் தயார் செய்து கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

இதையும் படியுங்க  கரூர் விவகாரம்... விஜய் மீது வழக்குப் போடச் சொன்னேன்... திருமா பகீர்! அலறும் தவெக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago