Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

sepehran Airlines

ஈரானின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கி செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் (Sepehran Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. விமானம் டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்திலேயே, அதன் லேண்டிங் கியரில் இருந்த ஒரு டயர் கழன்று விழுந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனை அறிந்த விமானிகள் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்க முயன்றனர். அப்போது விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட அதிர்வில், பயணிகள் அமர்ந்திருந்த கேபின் பகுதியின் மேற்கூரை திடீரென உடைந்து பயணிகள் மீது விழுந்ததில் அலறினர். இதனால் விமானத்தின் உட்புறக் கட்டமைப்புகள் வெளியே தெரியும் அளவுக்குச் சேதமடைந்தது.

இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. எனினும், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்றும் இதே செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-500 ரக விமானம் ஒன்று மஷாத் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி, முன்பக்க லேண்டிங் கியர் முறிந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க  இந்து சிறுமிகளை கட்டாயப்படுத்தி திருமணம்… பாகிஸ்தானில் அட்டூழியம்..! கதறி அழும் குடும்பங்கள்..!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago