தமிழ்நாடு காவல் துறைக்குள் நேரடியாக ஐபிஎஸ் தேர்வு எழுதி வந்த அதிகாரிகளுக்கும் படிப்படியாக எஸ்ஐ ஆகி அப்புறம் இன்ஸ்பெக்டராகி, பிறகு கன்பாஃம் ஐபிஎஸ் அதாவது பதவி உயர்வு அந்தஸ்து வாங்கிய அதிகாரிகளுக்கும் இடையில் பனிப்போர் இப்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. நேரடியாக ஐபிஎஸ் ஆகி வந்தவர்கள் மட்டும்தான் டிஜிபி வரைக்கும் போக முடியும். ஆனால் கன்பாஃம் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிகபட்சமாக ஐஜி லெவலுக்கு மேல் போகவிடாமல் ப்ரமோஷனில் காலதாமதம் செய்து தமிழ்நாட்டு காவல் துறைக்குள் ஒரு எழுதப்படாத சட்டத்தையே போட்டு வைத்திருக்கிறார்கள்.
முன்பு தாமரை கண்ணன் ஏடிஜிபியாக இருந்தபோது தனக்கு கீழ் இருந்த நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளை கொஞ்சம் விரைப்பாக நடத்தினார் என்கிற கடுப்பில்தான் கன்பாஃம் அதிகாரிகளை ஐஜிக்கு மேல் தூக்க கூடாது என ரூல்ஸ் போட்டு வைத்திருந்தார்கள். காவல்துறைக்குள் நடக்கிற இந்த அதிகார மோதலால் பாதிக்கப்பட்ட கன்பாஃர்ம் ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த விஷயத்தை நேராக கொண்டு போய் வீ த லீடர் அமைப்பின் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலையிடம் கொண்டு போய் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

முதலமைச்சர் விஜய்க்கு இதெல்லாம் புரிகிற அளவுக்கு அட்மின் நாலேட்ஜ் இருக்கா? என்பதே சந்தேகம்தான். அவரிடம் போய் சொன்னால் எதுவுமே நடக்காது என நொந்து போய்தான் அண்ணாமலையை தேடி போயிருக்கிறார்கள். விரைவில் அண்ணாமலை இந்த விஷயத்தை கையில் எடுத்து ஒரு ஆட்டத்தை ஆடப் போகிறார் என காக்கிகள் எதிர்பார்க்கிறார்கள். அண்ணாமலை வெடிப்பதற்கு முன்பாவது தன்னோட டிபார்ட்மெண்ட்க்குள் இப்படி ஒரு பனிப்போர் நடக்கிற விஷயம் முதல்வர் விஜயோட காதுக்கு எட்டுமா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
