தமிழக அரசியல் களத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காவல்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களையும் தூய்மைப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், காவல் நிலையங்களில் வெளிப்படைத்தன்மையையும் நடுநிலைமையையும் பேணும் நோக்கில், தனியார் அமைப்புகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனி எந்த போலீஸ் ஸ்டேஷனோ, போலீஸ் அதிகாரிகளோ தனி நபர்களிடமும் நிறுவனங்களிடம் ஸ்பான்சர்ஷிப்
வாங்கவே கூடாது என காவல் துறைக்கு முதல்வர் விஜய் ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்டிருக்கிறாராம்.
புழல் சிறைக்கு ஆய்வுக்கு சென்ற முதல்வர் விஜய் அப்படியே புழல் போலீஸ் ஸ்டேஷனையும் ஆய்வு செய்தார். அப்போது அந்த ஸ்டேஷன் போர்டில் தனியார் விளம்பரம் இருந்ததை பார்த்திருக்கிறார். அதற்கு பிறகு தன்னோட துறையான காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார்,
அப்போது, ”நான் பல ஸ்டேஷன் போர்டுகளை பார்த்தப்போ அதுல பிரைவேட் ஸ்பான்சர்ஷிப் இருக்கு. அதோட பேரிகார்டுகளிலும் பிரபலமான கடைகளோட பெயர்கள் இருக்கு. இப்படி இருந்தா நாம எப்படி நடுநிலைமையா இருக்க முடியும்” என முதல்வர் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.
அப்போது ஒரு அதிகாரி பல ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள், உயர் அதிகாரிகளின் அறைகளில்கூட தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் ஏசி, பிரிட்ஜ் என வளப்படுத்தி கொடுக்கிறது எல்லாம் கூட நடக்கிறது என எடுத்து கொடுக்க சட்டென இருக்கமான முதல்வர் ”இனி காவல் துறையில் தனியார்களோட பங்களிப்பு இருக்கவே கூடாது. டிபார்ட்மெண்ட் என்ன தருதோ அதைத்தான் யூஸ் பண்ணனும்” என முதல்வர் விஜய் கறாராக வாய்மொழி உத்தரவு போட்டு இருக்கிறராம்.
இதன் வெளிப்பாடாகவே ஸ்டேஷன்களோட அன்றாட செலவினங்களுக்கான மாதாந்திர நிதியைவும் பல மடங்காக உயர்த்தி மானிய கோரிக்கைகளையும் அறிவித்து இருக்கிறார் முதல்வர்.
