Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

trisha

தமிழக அரசியலில் சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லை; குறிப்பாக விஜய் மாநிலத்தின் முதல்வரான பிறகு இன்னும் இந்தச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

விஜய் -த்ரிஷா இடையிலான உறவு குறித்த நீண்டகால ஊகங்களும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவர்களுக்கிடையிலான உறவு குறித்த வதந்திகள் அவ்வப்போது எழுந்தாலும், இருவரும் அந்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும், அவ்வப்போது வெளியாகும் அரசியல் கருத்துகளும் இந்த விவாதத்தில் அனல் கிளப்புவதால்தொடர்ந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், பாலிவுட் நடிகையும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், த்ரிஷாவுக்கு ஆதரவாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

Republic Tamil

நடிகை த்ரிஷா பற்றி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான சர்ச்சையில் கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

”பெண்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கும் அவர்களைக் களங்கப்படுத்துவதற்கும் அவர்களின் குணநலன்கள் மீது தாக்குதல் நடத்துவது எப்போதும் ஒரு வழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பிரச்சனை இந்தியாவுக்கு மட்டும் உரியதல்ல. துன்புறுத்தல், நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களுக்குப் பெண்கள் பெரும்பாலும் குறிவைக்கப்படுகிறார்கள்.

இதையும் படியுங்க  கல்யாண வீட்டில் போய் புலம்பி தள்ளிய ஸ்டாலின், உதயநிதி... மரண பங்கமாய் கலாய்த்த விஜய்…!

இத்தகைய தாக்குதல்கள் எப்போது முடிவுக்கு வரும்”? என்று கேள்வி எழுப்பிய அவர், பெண்களைச் சமூகம் எவ்வாறு பார்க்கிறது? அவர்கள் உண்மையாகவே மதிக்கப்படுகிறார்களா? என்பது குறித்துச் சமூகம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார். விஜயுடனான இந்த விவகாரத்தில் த்ரிஷா தேவையற்ற முறையில் குறிவைக்கப்படுகிறார். இது இரு தனிநபர்களுக்கு இடையிலான விஷயமாக இருந்தபோதிலும், த்ரிஷாவின் குணநலன்களே குறிவைக்கப்படுகின்றன” என்பதை அவர் மறைமுகமாக உணர்த்துகிறார்.

கங்கனா முன்வைக்கும் கருத்து வலுவானதாக இருந்தாலும், இந்திய அரசியல் அமைப்பின் செயல்பாட்டு முறை இப்படித்தான் உள்ளது. எனவே, நாம் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago