Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

communist

தவெக அரசுக்கு 5 வருசம் ஆதரவு கொடுப்போம் என்று சொல்ல முடியாது என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தவெக தனது ஆட்சியை வலுப்படுத்திக் கொள்ள கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் ஆலோசனை கூட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், இத்தகைய கூட்டணி கூட்டங்களில் சிபிஎம் பங்கேற்காது என்பதைப் பெ.சண்முகம் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பெ.சண்முகம் கூறுகையில், ”சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் முக்கிய மக்கள் நல கேள்விகளுக்கு முதல்வர் விஜய் உரிய பதில்களை அளிக்காமல் தவிர்க்கிறார். ஆக்கப்பூர்வமான பதில்களுக்குப் பதிலாகப் பழமை வாய்ந்த கோப்புகளையும் பழைய வரலாறுகளையும் தோண்டித் துருவி அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடதுசாரிகள் உறுதியுடன் செயல்படும் வேளையில், தவெக அரசின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகின்றன.

இதையும் படியுங்க  தூய ஆட்சியில் ஊழல் வேட்டை..! ஊரக வளர்ச்சித்துறையில் இடமாறுதல் பேரம்..! சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் விஜய்..?
Republic Tamil

”தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதாகவும், வரும் தேர்தல்களை கூட்டணியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்கள் கூறினர். கூட்டணியை உருவாக்கும் நோக்கத்தில் கூட்டப்படும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். வெளியில் இருந்து தவெக அரசிற்கு ஆதரவு என்பது தொடரும். உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் ஒன்றுக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை. 3 கோப்புகள் மேஜையில் இருப்பதாக கூறும் முதல்வர் ஏன் 50 ஆண்டுகள் முன் உள்ளவற்றை கிளறுகிறார். ஊழலில் நடவடிக்கை என்பதில் கம்யூ. உறுதியாக உள்ளது, தவெக உறுதியாக உள்ளதா என்றுதான் சந்தேகம் எழுகிறது” என அவர் தெரிவித்துள்ளார். இடதுசாரிகள் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து வரும் தவெகவுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதை விட, தங்களை ஆதரிக்கும் தோழமைக் கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அல்லது கூட்டணி ரீதியான அணுகுமுறையை விட, மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டுமே ஆதரவு என்பதை இடதுசாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அரசின் செயல்பாடுகள், சட்டசபை பதில்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே தவெக அரசுக்கான தங்களின் ஆதரவு நீடிக்குமா என்பது தீர்மானிக்கப்படும் என்பதை பெ.சண்முகத்தின் இந்த அதிரடி பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  ஆட்சியைக் கவிழ்க்க தயாரான 8 தவெக எம்.எல்.ஏ-க்கள்..! செந்தில் பாலாஜி நெட்வொர்க்கின் பகீர் பின்னணி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago