Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

trichy

“தூய ஆட்சி”, “உடனடி நடவடிக்கை” என்ற போலிப் பிரச்சாரங்களுக்கும் பொய்ப் பரப்புரைகளுக்கும் மத்தியில், தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சந்தி சிரிக்கிறது. மனநலம் குன்றிய 16 வயது சிறுமி மீது பள்ளி கட்டிடத்திலேயே நான்கு சிறுவர்கள் நடத்திய கொடூர தாக்குதலும், தாராநல்லூரில் காரில் பெண்ணைக் கடத்திச் சென்று வீசி எறிந்த சம்பவமும், போதை மாத்திரையால் இளம்பெண் உயிரிழந்த சோகமும் தமிழகத்தின் இன்றைய அவல நிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் தாராளப் புழக்கத்தால் சிறுவர்களும் வாலிபர்களும் குற்றவாளிகளாக மாறி வரும் நிலையில், காவல்துறை வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோர் இல்லாத 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த நான்கு சிறுவர்கள் பலவந்தமாக அருகில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அந்த சிறுமியை வைத்து 4 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த மன நலம் குன்றிய சிறுமி சம்பவம் குறித்து அருகில் உள்ள பொதுமக்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த அப்பகுதி பொதுமக்கள் இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை அனைத்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையும் படியுங்க  நீங்க ரீல்ஸ் எடுக்க நாங்க என்ன லூசா..? அரசியல்வாதிகளின் டார்ச்சர்..! போர்க்களமான ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை..!

இந்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் அந்த சிறுவர்களையும் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவர்கள் நான்கு பேரும் சேர்ந்து சேர்ந்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த 4 சிறுவர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளில் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட நாலு சிறுவர்களும் 10, 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் காவல் நிலையம் உட்பட்ட தாராநல்லூர் பகுதியில் கார் ஓட்டுநர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து மீண்டும் அப்பகுதியில் காரில் இருந்து அந்த பெண்ணை தள்ளிவிட்டு தப்பித்துச் செல்லும் பொழுது பொதுமக்கள் சுற்றி வளைத்து அவர் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படியுங்க  சகாயமா..? ராகவா லாரன்ஸா..? வாரிசுகளின் சீட்டுக்கு வேட்டு..! திருச்சி கிழக்கில் 'கிறிஸ்தவ' லாஃபி..!

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் இரண்டு வாலிபனோடு சேர்ந்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அதிக அளவு போதை மாத்திரை உட்கொண்டு அந்தப் பெண் இறந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவங்கள் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் இதே தரை நல்லூர் பகுதியில் பள்ளி மாணவர்களின் பாலியல் பலாத்கார சம்பவம் பெரும் அதிர்ச்சி பகுதியில் ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக அந்தப் பகுதியில் சிறுவர்கள் போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதால் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையாகி வரும் நபர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுவரை தூய ஆட்சி என்று சொல்லும் இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்று உள்ளது. இதுவரை தமிழக அரசு எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவும் கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். இது தொடர்பான சம்பவங்களில் சுமார் 40 சதவீதம் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் நிர்வாகிகள், கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் என்பதும் செய்தியாகவும் தொடர்ந்து வெளிவருவது பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படியுங்க  என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்ணிட்டா… என் சா*வுக்கு இவன் தான் காரணம்.. வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் அதிர்ச்சி!

போலி ரீல்ஸ்களைப் போட்டு மக்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஆக்ரோஷத்துடன் குரல் எழுப்பி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago