Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

husband

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த வேட்டங்குடியை சேர்ந்தவர் வெங்கடேசன்(44). தச்சு தொழிலாளி. இவரது மனைவி துர்காதேவி(41). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கடேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதனிடையே கணவர் வெங்கடேசன் வெளிநாட்டில் சென்ற நேரத்தில் துர்காதேவிக்கும் பாலகுருவுக்கும்(40) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளிநாட்டில் இருந்து வந்த கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டுக்கு துர்காதேவி சென்று விட்டார். இருப்பினும் துர்காதேவியிடம் பாலகுருவிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கணவர் வெங்கடேசன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெங்கடேசன் தற்கொலை செய்வதற்கு முன் தனது செல்போன் வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் தனது சாவுக்கு பாலகுரு தான் காரணம் என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்க  மதுரை யூடியூபர் வீரமணி சம்பவத்தை சுட்டிக்காட்டி கேரளா போலீஸ் அதிரடி எச்சரிக்கை!

இந்த சம்பவம் தொடர்பாக பாலகுருவை கைது செய்ததுடன் தலைமறைவாக இருக்கும் துர்காதேவியை தேடி வருகின்றனர். மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago