Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியலிலும் தேசிய அரசியலிலும் எதிர்பாராத திருப்பங்களும், சலசலப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

தவெக தரப்பில், 2029-ல் ராகுல் காந்தி, விஜய்யின் கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் எனச் சில நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஆனால் காங்கிரஸ் தரப்பில் தாரகை வெட்டுப்பட் போன்ற தலைவர்கள் விஜய்யின் ஆதரவாளர்கள் இன்னும் “ரசிக மனநிலையிலேயே” இருப்பதாகக் விமர்சித்துள்ளனர்.

ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது . பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும், விஜய் தரப்பில் இது அலட்சியமாகவே கையாளப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் சமீபத்திய மேட்டூர் அணை வருகை மற்றும் களப் பயணங்கள் குறித்துக் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Republic Tamil

எம்ஜிஆர் பாணி செட்டப்?
மேட்டூர் அணையைத் திறந்துவிடச் சென்றபோது, பாட்டி ஒருவருக்குக் கூலிங் கிளாஸ் மாட்டிவிட்ட சம்பவங்கள் திட்டமிடப்பட்ட ஒரு செட்டப் என விமர்சிக்கப்படுகிறது. பாட்டிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கூலிங் கிளாஸ் வழங்கப்பட்ட போதிலும், “எங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முதல்வர் விஜய் எந்தப் பதிலும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டுச் சென்றுவிட்டார்” என சம்பந்தப்பட்ட பாட்டிகளே மீடியாக்களிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்க  அண்ணா அறிவாலயத்தில் அதிரடி என்ட்ரி கொடுத்த அலிம் அல் புகாரி… திமுகவில் இணைந்து பரபரப்பு

திமுக அரசு வழங்கி வரும் ₹1000 உதவித்தொகையை மட்டுமே மக்கள் நம்பியிருப்பதாகவும், விஜய் வாக்குறுதி அளித்த ₹2500 உதவித்தொகையோ அல்லது மின் கட்டணக் குறைப்போ (500 யூனிட் சலுகை) நடைமுறைக்கு வரவில்லை என்றும் மக்களின் மனக்குறைகள் விவரிக்கப்படுகின்றன. இந்தியா டுடே – சி-வோட்டர் சர்வே சுட்டிக்காட்டும் அதிர்ச்சி தரவுகள்தேசிய அளவில் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்புத் தரவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Republic Tamil

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கெப்பாசிட்டி ராகுல் காந்திக்கு 29% உள்ளது என்றால், விஜய்க்கு 12.2% ஆதரவு கிடைத்துள்ளது. கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் விஜய்க்கு 13.3% பேர் பிரதமர் வேட்பாளருக்கான தகுதி இருப்பதாக வாக்களித்துள்ளனர். பாஜக மற்றும் மோடி மீதான அதிருப்தி வாக்குகள் நேரடியாகக் காங்கிரஸுக்குச் செல்லாமல், விஜய்யை நோக்கிப் பிரிவதால் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் கவலையடைந்துள்ளது.

ராகுல் காந்தி நேரு-காந்தி குடும்பத்தின் 5-வது தலைமுறையாக எவ்விதப் பெரிய போராட்டமும் இன்றித் தலைமை இடத்திற்கு வந்தவர். ஆனால் விஜய், முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு 33% வாக்குகளைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்.ராகுல் காந்தி ஒருமுறைக் கூட முதலமைச்சராகப் பணியாற்றித் தன் நிர்வாகத் திறனை நிரூபித்ததில்லை. ஆனால் விஜய் 100 நாள் ஆட்சியில் மக்களின் குறைகளைத் தீர்க்க முயற்சி செய்து வருகிறார். காங்கிரஸ் மீது நிலக்கரி ஊழல், நேஷனல் ஹெரால்டு போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கும் சூழலில், விஜய் மீது இதுவரை பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது அவருக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  ரூ- 300 கோடி வாங்கிய எடப்பாடி..! தமிழகத்தில் லாட்டரியை இறக்க டீல்..! புட்டுப்புட்டு வைத்த சவுக்கு சங்கர்..!

தவெகவை நம்பிச் சென்ற காங்கிரஸுக்கு இப்போது ஏமாற்றமே எஞ்சியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரமே தனது வெற்றிக்குக் காரணம் எனத் தாரகை கூறியிருப்பது, தவெகவைச் சீண்டிப் பார்க்கும் செயலாக உள்ளது. விஜய்யின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும், வரும் தேர்தலில் தங்கள் இருப்பைத் தக்கவைக்கவும் காங்கிரஸ் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணிக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன.

தவெக-வின் 5 ஆண்டு கால ஆட்சி மற்றும் அதன் சாதனைகள் குறித்த கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், தேசிய அளவில் ராகுல் காந்தியின் இடத்திற்கு விஜய் ஒரு சவாலாக உருவெடுத்து வருவது காங்கிரஸை நிலைதடமாறச் செய்துள்ளது. காங்கிரஸ் மீண்டும் திமுகவின் பக்கம் சாய்ந்தால், தமிழக மற்றும் தேசிய அரசியல் களத்தில் மீண்டும் ஒரு புதிய கூட்டணி மாற்றம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago