Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுயிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி பேடுகளை மீண்டும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகினார். தேர்தல் ஆணையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பிலும் ஆஜராகி வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படியுங்க  CM சார்.. ஜெயலலிதா பாணியை மாத்துங்க.. உங்க உயிர் மட்டும் தான் முக்கியமா..? விஜய் கான்வாயில் தொடரும் விபத்துகள்..!

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், கொளத்தூர் தொகுதியில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்ற மனு விசாரணைக்கு உகந்ததல்ல கூறியதை அடுத்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago