Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

chennai accident

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் சென்னை நோக்கித் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தை அடுத்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படியுங்க  "ஒரு நிமிட 'கலெக்டர்' கெத்து… இப்போ சட்டத்தின் பிடியில்! ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை!"
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 minutes ago at 46 minutes ago