Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

”இந்துக்களுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி, சிரஞ்சீவி போன்று விஜயும் காணாமல் போய்விடுவார்” என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் அருள் முருகன் எச்சரித்துள்ளார்..

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதனம் குறித்து திமுகவினர் பேசி வந்தனர். இந்த தேர்தலோடு அவர்கள் காணாமல் போனார்கள். தற்போது தவெக-வினர் சனாதனம் குறித்து பேசி வருகிறார்கள். அவர்களும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்கள்,

மக்கள் ஏதோ தெரியாமல் வாக்களித்து விட்டார்கள். தமிழக வெற்றிக்கழகம் என்பது மைனாரிட்டி அரசாங்கம். திமுக கூட்டணி கட்சிகளுடனும், அதிமுகவை உடைத்து அவர்களிடம் கூட்டணி சேர்ந்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஒரு மைனாரிட்டி அரசாங்கம். இந்து சமுதாயத்திற்கு எதிரானது.

எப்பொழுது விஜய் திராவிட கழகத் தலைவர் வீரமணியை பார்த்தாரோ, அப்போதே அவர் கதை முடிந்து விட்டது. இவர்கள் இந்து விரோதிகள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது, வேல் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு போவதெல்லாம் நாடகம். இவர் எப்படி தூய்மையான அரசாங்கத்தை வழங்க முடியும்?

இதையும் படியுங்க  திருக்குறள் பொறிப்புகள் மறைந்ததால் அதிரடி நடவடிக்கை – தாமிரபரணியில் தவெக போஸ்டர்கள் அகற்றம்!

சனாதானம் பற்றி பேசுபவர்கள் ஜோதிடர் காலிலே விழுந்து கிடக்கிறார்கள். நல்ல நடிகைகளுடன் நடித்ததால் தான் விஜய் பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. விஜய் பின்பற்றுவதெல்லாம் திருக்குவளை பார்முலாவே தவிர வேறு ஒன்றும் இல்லை.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இருந்த அலை போன்று தமிழகத்தில் தவெக-வுக்கும் அலை உள்ளது. அதில்தான் விஜய் வெற்றி பெற்றார். அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி, சிரஞ்சீவி, போன்று அந்த வரிசையில் விஜயையும் சென்று விடுவார். தற்போது தவெக எம்எல்ஏ முஸ்தபா விஜய் சொல்லி தான் சனதானம் குறித்து பேசி வருகிறார்.

மதசார்பின்மை, சனாதானம் குறித்து தெரியாத குழந்தைகள் தனது தாத்தா பாட்டியிடம் கெஞ்சியதால் தான் வாக்குகள் விழுந்துள்ளது. நடிகர் என்பதற்காக விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள். இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி விஜய் வெற்றி பெற முடிந்ததே தவிர இது உண்மையான வெற்றி அல்ல, சினிமா மீது உள்ள மோகத்தால் தான் விசிலுக்கு வாக்குகள் விழுந்து உள்ளது எனவே போகப்போக விஜய்யின் ஆட்சி மக்களுக்கு புரிய வரும்” என்றார்.

இதையும் படியுங்க  விஜயின் மாஸ்டர் பிளான்.. அதிமுக- திமுகவுக்கு செக்..? பரபரக்கும் பனையூர்..!

-பி.சக்திவேல், சிறப்பு நிருபர், புதுச்சேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago