அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த வாரமே ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கத் தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில் கடந்த மாதம் ஒரு நிலையற்ற போர்நிறுத்தம் எட்டப்பட்டதில் இருந்து, இரு நாடுகளும் “மிக விரிவான செயல்பாட்டுத் திட்டமிடலில்” ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். இறுதி முடிவு எதுவும் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்தத் தயாரிப்புகள் சில நாட்களுக்குள் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவர்கள் கூறினர்.
பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா, இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு வெடித்த பல மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையே ராஜதந்திர முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டம், தடைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் மீண்டும் மீண்டும் முறிந்து வருகின்றன.
அமெரிக்கா கடினமான இராணுவ, அரசியல் தேர்வுகளை எதிர்கொள்கிறது. வான்வழித் தாக்குதல்கள் ஒரு சாதாகமான வழியாக இருந்தாலும், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்க ஈரானைக் கட்டாயப்படுத்த அவை போதுமானதாக இருக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படும் மற்றொரு சாதகமான சூழ்நிலை என்னவென்றால், ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை இலக்காகக் கொண்ட சிறப்புப் படைகளின் நடவடிக்கைகளை உள் வைத்திருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்ட நடவடிக்கைகள் அபாயங்களையும், உள்நாட்டில் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகளையும் கொண்டிருக்கும்.
“ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் கைப்பற்ற முயற்சிப்பதற்காக இரு நாடுகளும் ஒரு சிறப்புப் படைகளின் நடவடிக்கையைத் தொடங்கலாம். ஆனால்ம், அப்படிப்பட்ட தாக்குதல் அமெரிக்க வீரர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது மக்கள் விரும்பாத ஒரு போருக்கான உள்நாட்டு அமெரிக்க ஆதரவை மேலும் பாதிக்கும்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
விரைவில் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் அல்லது கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய எச்சரிக்கைகளுக்கு ஒரு நாள் கழித்து இந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. ட்ரூத் சோஷியல் மீடியாவின் ஒரு பதிவில், ஈரான் வேகமாகச் செயல்பட வேண்டும். “இல்லையென்றால் எதுவும் மிச்சமிருக்காது” என்றும், “நேரம் விரைந்து கொண்டிருக்கிறது” என்றும் டிரம்ப் கூறினார்.
ஈரானில் உள்ள எரிசக்தி, உள்கட்டமைப்பு இலக்குகள் மீதான சாத்தியமான தாக்குதல்கள் உட்பட, இராணுவத் தெரிவுகளை மதிப்பாய்வு செய்ய, டிரம்ப் வார இறுதியில் மூத்த தேசிய பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்தார் என்றும் செய்தி வெளியானது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் அனைவரும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விவாதங்கள் குறித்து அறிந்த அதிகாரிகள், ஜனாதிபதி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்தால், அதற்கான மேம்படுத்தப்பட்ட மாற்றுத் திட்டங்களை அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
