https://republictn.com/

நாளை காலை 11.30 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக பதவியேற்க உள்ளார் தவெக தலைவர் விஜய்.
முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு விஜய் மூன்று முக்கிய திட்டங்களில் முதலில் கையெழுத்திட உள்ளதாக தகவல். அதில்  “வெற்றி பயண திட்டம்”, அதாவது தமிழ்நாடு முழுவதும் எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்திற்கும் செல்லக்கூடிய வகையில் அனைத்து விதமான அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான திட்டத்தில் கையெழுத்திட  இருக்கிறார் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் போது விஜய்  ஒரு திட்டத்தை அறிவித்திருந்தார். அதாவது தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் விஷயமாக என்ன இருக்கும் என்றால் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய பிங்க் பேருந்து நகர பேருந்துகள் பொறுத்தவரையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது. அது எப்போதாவது ஏதாவது ஒரு பேருந்து தான் வருகிறது. அதனால் பெண்கள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள்  நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இலவச பயணம் என்று அறிவித்து விட்ட பிறகு அது அனைத்து பேருந்துகளுக்கும் இருக்க வேண்டும். எனவே தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்து எந்த மூலைக்கு செல்வதாக இருந்தாலும் அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசமாக இனி பெண்கள் பயணிக்கலாம் எனக்கூறியிருந்தார். எனவே முதலமைச்சராக பதவியேற்ற பிற்கு அந்த திட்டத்தில் விஜய் முதலில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல இரண்டாவதாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தில் விஜய் கையெழுத்திடப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நடைமுறையில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகின்றது. அதனை மாற்றி முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன என்று விசாரித்த போது, தவெகவிற்கு அதிக அளவிலே பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில பெண்களுக்கு அனைத்து அரசு  பேருந்துகளும் இலவசமாக கொடுத்தால் அது பெரிய அளவிலே அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்.

அதேபோல அனைத்து குடும்பங்களும் முதலில் பயன்பெறக்கூடிய வகையில் ஒரு திட்டம் இருக்க வேண்டும். எனவே அந்த அடிப்படையில் ஏற்கனவே திமுக ஆட்சியிலே மூன்று முறைக்கு மேல் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் பல குடும்பங்கள் பாதிப்படைந்திருக்கிறது. எனவே 200 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கும் போது அது அனைத்து தரப்பு குடும்பங்களுக்கும் ஒரு நன்மை பயக்கக்கூடிய திட்டமாக இருக்கும். மூன்றாவதாக பெண்கள் பாதுகாப்பு என்று தனி சட்டம். திமுக ஆட்சி தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

என்.சி.ஆர்.பி தரவுகளின்படி, 2020ல் 6,630 வழக்குகளில் இருந்து 2022ல் 9,207 ஆகவும், 2023ல் 8,943 ஆகவும் உயர்ந்தது. போக்ஸோ வழக்குகள் 2022ல் 4,968லிருந்து 2024ல் 6,969 ஆக சுமார் 40% உயர்வு அதிகரித்தன. பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு, சம்பவங்கள் தொடர்வதாகவும், போதைப் பொருள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு என விமர்சனங்கள் எழுந்தன. இதுவும் திமுக தோற்க முக்கிய காரணம். ஆகையால் இந்த மூன்று திட்டங்களில் கையெழுத்திடுகிறார் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago