Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கடந்த மே மாதம் 10ம் தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், இன்று மேலும் விஜய் அமைச்சரவையில் 23 பேர் பதவியேற்றுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதன் பிறகு அவர்கள் தலைமை செயலகத்திற்கு சென்று தங்களது முதல் கையெழுத்தை எடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர்களாக பொறுப்பெயற்ற பின் அவர்களுக்கான அந்த வாகனங்கள் உதவியாளர் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அமைச்சர்களாக இன்று 23 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுள்ளனர். அதன்படி, தூத்துக்குடி – ஸ்ரீநாத், அவிநாசி – எஸ். கமலி, குமாரபாளையம் – சி. விஜயலட்சுமி, காஞ்சிபுரம் – ஆர்.வி. ரஞ்சித்குமார், கும்பகோணம்- வினோத், திருவாடானை – ராஜீவ், கடலூர் – பி. ராஜ்குமார், அரக்கோணம் – வி. காந்திராஜ், ஒட்டப்பிடாரம் – மதன் ராஜா. பி, ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி. கே, கிள்ளியூர் – ராஜேஷ் குமார். எஸ், ஈரோடு கிழக்கு – எம். விஜய் பாலாஜி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ராசிபுரம் – லோகேஷ் தமிழ் செல்வன், சேலம் தெற்கு – விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் – ரமேஷ், மேலூர் – விஸ்வநாதன், வேளச்சேரி – குமார், கோவை வடக்கு – சம்பத் குமார், அறந்தாங்கி – முகமது ஃபர்வாஸ், தாம்பரம் – சரத்குமார், ராதாகிருஷ்ணன் நகர் – மேரி வில்சன், கிணத்துக்கடவு – விக்னேஷ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago