Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அமெரிக்க வரலாற்றிலேயே, பதவியில் இருக்கும் தற்போதைய அதிபரின் புகைப்படம் பாஸ்போர்ட்டில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய வடிவமைப்பை வெள்ளை மாளிகை “பேட்ரியாட் பாஸ்போர்ட்” (Patriot Passport) என்று பெயரிட்டுள்ளது.

இந்தப் பாஸ்போர்ட்டில், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞர் டேனியல் டோரோக் எடுத்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், அதிபர் டிரம்ப் தனது மேசையில் இரு கைகளையும் ஊன்றி, தீவிரமான முகபாவனையுடன் அமர்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தின் கீழே, டிரம்பின் பிரத்யேக கையொப்பமும் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டின் பின்னணியில், அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் பிரகடனத்தின் உரை இடம்பெற்றுள்ளது. மேலும், அதன் மேற்பகுதியில் “Welcome, but be good!” (வரவேற்கிறோம்… ஆனால் ஒழுங்காக இருங்கள்!) என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இதன் மறுபக்கத்தில், 1776-ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தைச் சித்தரிக்கும் ஓவியமும், “United States of America 250” என்ற தங்க நிற வாசகமும் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட், வாஷிங்டனில் உள்ள பாஸ்போர்ட் முகமையில் நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே, இருப்பு உள்ளவரை வழங்கப்படும். ஆன்லைன் அல்லது பிற பாஸ்போர்ட் மையங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, வழக்கமான பழைய பாஸ்போர்ட் வடிவமைப்பே தொடர்ந்து வழங்கப்படும்.

வரும் ஜூலை 6, 2026 முதல் இந்த புதிய பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், இதற்கான இரண்டு பிரத்யேக பாஸ்போர்ட் வழங்கும் நிகழ்வுகள் ஆகஸ்ட் 22 மற்றும் செப்டம்பர் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

அமெரிக்க வரலாற்றில், பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் புகைப்படம் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்டில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago