Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடுத்துள்ளார்.

இன்று கரூர் துயரம் சம்பவம் விசாரணையில் இருக்கும் போது அந்த சம்பவத்தில் கொலைக்குக் காரணம் யார் என்பது குறித்து ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு மாறாக ஒரு புதிய தகவலை நேற்று எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் இணைப்பு விழாவில் பேசியுள்ளார் ஆதவ் அர்ஜூனா. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்த விசாரணையை மீறி அமைச்சர் ஆதவ் அர்ஜூன கருத்து தெரிவித்திருப்பது தவறான தகவல் என்பதால் சிபிஐ அமைச்சர் ஆதவ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி அவர் பேசுவதற்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கரூர் சம்பவம் தொடர்பாக எவரும் பேசுவதற்கோ, கருத்து தெரிவிப்பதற்கோ சிபிஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அனுமதி இல்லாத சூழ்நிலையில் அமைச்சரே அது குறித்து தவறான ஒரு தகவலை ஒரு பொது வெளியில் பேசி இருப்பது கட்டடத்துக்குரியது என்றும் அவர் மீது சிபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது கரூர் மக்களை திசை திருப்பும் செயல். கருத்த தவறான கருத்துக்களை அமைச்சர் ஆதரிப்பது போல் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago