https://republictn.com/

தமிழக வெற்றிக கழக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் விஜய் தமது கட்சி நிர்வாகிகள் மற்றும் தமக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய தலைவர் காதர் மொஹீதின் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜோசப் விஜய் தலைமையில் இருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகம் ஆட்சியை அமைப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதென தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தோம்.

முஸ்லிம் லீக் என்பது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ சபை, இஸ்லாமியர்களின் உணர்வு விருப்பம் எண்ணம் எந்த திசையில் செல்கிறதோ அதனை மதித்து அதன்படி நடக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இஸ்லாமியர்கள் விருப்பம் தெரிவித்ததன் பேரில், பெரும்பான்மை நிருபித்து ஆட்சி அமைக்க ஆளுநர் அறிவித்ததன் பேரிலும் ஆளுநர் ஆட்சியை அமைத்து பாஜகவை உள்ளே நுழைவிடாமல் தடுப்பதற்காகவும் திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும், தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைய எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளிக்கப்பட்டதுடன் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது.

ஆட்சியில் அமைச்சரவையில் இடம் மற்றும் எந்த ஒரு நிபந்தனையும் விடுக்கப்படவில்லை நல்ல ஆட்சி அமைய வேண்டும், திராவிட மாடல் ஆட்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த புதிய அரசு முன் வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தோம், இதனை முன்வைத்து எங்களது ஆதரவை தெரிவித்தோம்.

நீங்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது இது பெரிய மனதுதான், பெருந்தன்மையாக அழைத்ததற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அகில இந்திய அளவில் கேரளாவின் தலைவர் சாதிக் அலி தங்கல் தலைமையிலான அரசியல் ஆலோசனை குழுவிடம் ஆலோசனை பெறப்பட்டதில், அக்குழுவானது அமைச்சரவையில் இடம்பெற எந்த தடையும் கிடையாது என்றும், சேர்ந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

அதன்படி நாளைய தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயிர்மற்ற குழு கூடி இந்த குழுவின் முடிவின் படி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற அறிவிப்பை 11மணி அளவில் வெளியிட உள்ளோம். நல்லாட்சி நடக்க வேண்டும் என்ற நோக்கிலும் நல்ல ஆட்சி தொடர வேண்டும் என்ற வியூகத்திலும் ஆட்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர், அதிமுக அமைச்சரவையில் பங்கேற்க கூடாது என கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் எந்தஒரு நிபந்தனையும் வைக்கவில்லை. அவர்கள் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

1989இல் எடுத்த முடிவின்படி பாபர் மஸ்ஜித் பிரச்சனையில் மும்பையில் நடந்த கூட்டத்தில் விடுத்த அறிவிப்பில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சியில் பாஜக செய்கிறது என்றும் அதற்கு எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் ஆதரவு கொடுக்கக் கூடாது என்றும், அவர்களுடன் யார் கூட்டணி வைக்கிறார்களோ அவர்களுக்கும் ஆதரவு கொடுக்கக் கூடாது என்பதுதான் 1989இல் வெளியிட்ட பாம்பே டிக்ளரேஷன் இவர்கள் பாஜகவை கூப்பிட்டு ஆட்சியில் சேர்த்தால் நாங்கள் வெளியேறி விடுவோம்” என உறுதிபட தெரிவித்தார்.

_ஜான் கண்ணன், திருச்சி, சிறப்பு நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago