கணவனை இழந்து, கருணை அடிப்படையில் வேலைக்கு வந்து, மூன்று பிள்ளைகளைக் கரை சேர்க்கப் போராடிய ஒரு தாயின் வாழ்க்கை, தகாத சேர்க்கையால் தனியார் விடுதியின் கழிவறையில் ? மர்மமாக முடிந்திருக்கிறது.
யார் அந்த தமிழரசி? திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ரெட்டிமாங்குப்பம்தான் தமிழரசியின் சொந்த ஊர். கணவர் சங்கர் ராவ் ரயில்வே துறையில் பணியாற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். தாலி அறுந்த துக்கத்தோடு, ஜெய் ஸ்ரீராம், ராகுல்ராம், சரவணராவ் என மூன்று குழந்தைகள் என்ற பெரும் சுமையும் சேர்ந்துகொண்டது.கருணை அடிப்படையில் ஆம்பூர் ரயில் நிலையத்தில் அவருக்குப் பணி கிடைத்தது. ‘இனி வாழ்க்கை மெல்ல நிமிரும்’ என்று நம்பினார் அந்த அபலைப் பெண். ஆனால், விதி யுவராஜ் என்ற காமக் கொடூரனின் உருவில் வந்தது.

வலை விரித்த யுவராஜ்! வாணியம்பாடி, உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த நாராயணமூர்த்தியின் மகன் யுவராஜ் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பணியாற்றி வருகிறான். ரயில்வே வட்டாரத்தில் தமிழரசியுடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது வெளியிடங்களுக்குச் சென்று வந்ததைச் சக ஊழியர்களே உறுதிப்படுத்துகின்றனர்.
வாணியம்பாடி பகுதியினரோ யுவராஜ் பற்றி இன்னும் அதிர்ச்சித் தகவலைச் சொல்கின்றனர்.”ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்தவன். அராஜகப் பேர்வழி. பெண்கள் விஷயத்தில் காமக் கொடூரன்” என்கிறார்கள். இப்படிப்பட்ட பின்னணி கொண்டவனிடம் தமிழரசி சிக்கியதுதான் சோகத்தின் தொடக்கப்புள்ளி. அந்த இரவு…
ஏலகிரி மலையில் நடந்தது என்ன? நேற்று முன்தினம் இருவரும் ஏலகிரி மலைக்குச் சென்று, தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அறையில் இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
சிறிது நேரத்தில் கழிவறைக்குச் சென்ற தமிழரசி வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. விடுதி காவலாளி உதவியுடன் கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, தமிழரசி உயிரிழந்து கிடந்ததாக முதலில் அவன் தரப்பில் கதை சொல்லப்பட்டது.
தகவலறிந்த ஏலகிரி மலை போலீஸார் உடலைக் கைப்பற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை என்று மூடப்பார்த்த மர்மம்!ஆரம்பத்தில் இது ‘தற்கொலை’ வழக்காகப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு பெண், ஒரு ஆணுடன் விடுதியில் தங்கி மர்மமாக இறந்திருக்கிறார். மதுபோதை, வாக்குவாதம், கள்ள உறவுப் பின்னணி இருக்கும்போது, எப்படி அவசர அவசரமாகத் தற்கொலை என்று முடிவுக்கு வந்தார்கள்? யாரைக் காப்பாற்ற இந்த அவசரம்? பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கதறலும், சமூக ஆர்வலர்களின் அழுத்தமும் வெடிக்கவே, வழக்கு திருப்பத்தூர் டி.எஸ்.பி. கவனத்துக்குச் சென்றது. அதன்பின்னரே வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, யுவராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறான்
ஏலகிரி மலை காவல்துறையின் முதல்கட்ட செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. மர்ம மரணம் என்றால் அத்தனை கோணங்களிலும் விசாரிக்க வேண்டாமா? உடன் இருந்த நபரின் பின்னணியைத் தோண்டி எடுக்க வேண்டாமா? ‘மூன்று திருமணங்கள் செய்த அராஜகப் பேர்வழி’ என்று ஊரே சொல்லும்போது, போலீஸுக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி? காக்கி உடை அதிகாரத்துக்கானது அல்ல; அநீதிக்கு எதிரான கவசம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
கணவனை இழந்து, மூன்று குழந்தைகளுடன் தவித்த ஒரு பெண்ணின் பலவீனத்தைப் பயன்படுத்தியது மன்னிக்க முடியாத பாவம். ஏற்கனவே மூன்று திருமணங்கள் என்றால், இவனது வாழ்க்கை முறையே பெண்களைப் பகடைக்காயாக்குவதுதானா? விடுதி அறையில் நடந்த வாக்குவாதத்தின் உச்சம் கொலையா? தற்கொலைக்குத் தூண்டியதா? உண்மை வெளிவர வேண்டும்.”இவனுக்கு ஜாமீன் கிடைக்கவே கூடாது. கடுமையான தண்டனை கிடைக்கும் வரை இந்த வழக்கைத் திசை திருப்ப விடக்கூடாது
மத்திய அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளின்படி (Central Civil Services Conduct Rules), ஒரு ரயில்வே ஊழியர் பின்வரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் , கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும்போதோ, அல்லது சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாதபோதோ மற்றொரு திருமணத்தைச் செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பணிநீக்கம்: விதிகளுக்குப் புறம்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்வது கண்டறியப்பட்டால், அந்த ஊழியர் வேலையிலிருந்து நீக்கப்படனும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் சட்ட யுவராஜ் கொலை வழக்கில் கைது ஆனதால் அவரை ரயில்வே நிர்வாகம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார்கள் சட்ட வள்ளுநர்களும் சமூக ஆர்வலர்களும்
மூன்று குழந்தைகள் தாய் தந்தையின்றி நிற்கின்றன. அந்தக் கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டியது நீதிமன்றம் மட்டுமல்ல; உண்மையை மூடப்பார்த்தவர்களும்தான்!
