Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நெல்லை தச்சநல்லூர் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 19.02.2022 அன்று மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் சுரேஷ் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அவரது மாமனார் மாரியப்பன் (வயது 54) மற்றும் அவரது தம்பி சுடலை (வயது 34) ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுரேஷ் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4ல் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மயில்சாமி, தீர்ப்பளித்தார்.

சுரேஷை தகாத வார்த்தைகளால் திட்டிய மாரியப்பன் மற்றும் சுடலை ஆகிய இருவருக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், காயம் ஏற்படுத்தியதற்காக தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டதால், இருவருக்கும் மொத்தம் தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  நாளுக்கு நாள் நரகமாகும் வாழ்க்கை..! முல்லை நகரா..? மக்களை நோய்களால் கொல்லும் நகரா..? செவிடாய் மாறிய சேலம் மாநகராட்சி..!

அபராதத் தொகையை செலுத்த தவறினால், ஒரு வாரம் மெய்க்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago