Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாடு சட்டமன்றம் கூடிய நிலையில், ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டது. இந்த உரை என்பது, அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களை ஆளுநர் மூலம் அறிவிக்கும் ஒரு நடைமுறை ஆகும்.

அந்த ஆளுநர் உரையில், தமிழ்நாட்டில் விரைவில் “சமூக நீதி கணக்கெடுப்பு” எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஒரு மிக முக்கியமான அறிவிப்பாக கருதப்படுகிறது.

இந்த அறிவிப்புக்காக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மருத்துவர் ஐயா தலைமையிலான அமைப்புகள் கடந்த 46 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் வலியுறுத்தி வந்துள்ளன.

1980ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநாட்டிலேயே, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதியின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 46 ஆண்டுகளாக பல்வேறு அரசுகளிடம் இது குறித்து வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு முதல், பின்னர் வந்த கலைஞர் அரசு, ஜெயலலிதா அரசு, மீண்டும் கலைஞர் அரசு, எடப்பாடி பழனிசாமி அரசு, மற்றும் தற்போதைய அரசு வரை பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படியுங்க  தமிழ்நாட்டுக்கு ‘டபுள் ஷாக்’ கொடுத்த கேரளா & கர்நாடகா! எல்லையில் எழும் அணைச் சிக்கல்... முறியடிக்குமா தமிழகம்?

இறுதியாக, சமீபத்தில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தன. அதன் பின்னர், முதலமைச்சரை நேரில் சந்தித்து, சமூக நீதி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் இந்த கோரிக்கையின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதுவே தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான சமூக மற்றும் அரசியல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago