Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ராஜஸ்தானின் சூரு (Churu), பிகானேர், ஸ்ரீ கங்காநகர் மற்றும் சிகார் மாவட்டங்களில் இன்று மதிய வேளையில் திடீரென பிரம்மாண்டமான மணல் புயல் தாக்கியது. பாலைவனப் பகுதிகளில் உருவான இந்த சக்திவாய்ந்த மணல் புயல், சுனாமி அலைபோல் மாபெரும் மணல் சுவராக எழுந்து நகரங்களையே முழுவதுமாக மூடியது.

கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான அடர்த்தியான தூசி மேகங்கள் சூரிய ஒளியை முற்றிலும் மறைத்ததால், பிற்பகல் 2 மணியளவிலேயே அப்பகுதிகளில் நள்ளிரவு போன்ற இருள் சூழ்ந்தது. இதனால் பார்வைத்திறன் (Visibility) மிகவும் பாதிக்கப்பட்டு, சில இடங்களில் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலைக்கு குறைந்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள், பகலிலேயே முகப்பு விளக்குகளை (Headlights) எரியவிட்டபடி வாகனங்களை இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பல இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் (NCR) மணல் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய இந்த புயல் அப்பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க  'மார்பை அழுத்துவதும், துப்பட்டாவை இழுப்பதும் கற்பழிப்பு ஆகாது..!' உயர் நீதிமன்றத் தீர்ப்பால் கடுப்பான உச்ச நீதிமன்றம்..!

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்ததாவது, வட இந்தியாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை (Heatwave) மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேற்கத்திய இடையூறு (Western Disturbance) ஆகியவை ஒன்றிணைந்ததன் விளைவாக இந்த தீவிரமான “மணல் சுனாமி” போன்ற புயல் உருவானது எனக் கூறியுள்ளது.

இந்த மணல் புயலைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மற்றும் டெல்லியின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் நிலவி வந்த கடும் வெப்பம் தற்போது ஓரளவு தணிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இந்த அரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் இயற்கை நிகழ்வின் உண்மை காட்சிகளை பதிவு செய்த பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago