Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நார்வே செஸ் 2026 தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான ஆர். பிரக்ஞானந்தா, உலகச் செஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சனை ஒரே கிளாசிக்கல் செஸ் தொடரில் இரண்டு முறை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, நடப்பு நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் ஆட்டங்களில் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்துள்ளார். இதன் மூலம், ஒரே கிளாசிக்கல் செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற லினாரஸ் செஸ் தொடரில் இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்தியிருந்தார். தற்போது, 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை பிரக்ஞானந்தா சமன் செய்துள்ளார்.

நடப்புத் தொடரின் ஒரு சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடனும், ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்ற 8-வது சுற்று ஆட்டத்தில் கருப்பு நிறக் காய்களுடனும் விளையாடி, கார்ல்சனை அவரது சொந்த மண்ணான நார்வேயிலேயே பிரக்ஞானந்தா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க  45 வயதில் புதிய அவதாரம்! சிஎஸ்கே-வில் தல தோனிக்கு காத்திருக்கும் மாபெரும் பொறுப்பு..! ரசிகர்கள் உற்சாகம்..!

மேலும், 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிளாசிக்கல் செஸ் போட்டிகளில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா தன்வசப்படுத்தியுள்ளார்.

நார்வே செஸ் தொடரின் 8 சுற்றுகள் முடிவில், பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேவேளையில், மேக்னஸ் கார்ல்சன் 9 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இந்த வெற்றி, இந்திய செஸ் உலகிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், உலக அரங்கில் பிரக்ஞானந்தாவின் திறமையையும் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago