Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கடுமையாக விமர்சித்து ஆட்சேபனைக்குரிய மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 25 வயதான ருத்திகா சிங் (Ruchika Singh) என்ற இளம்பெண் மீது ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ (Zero FIR) பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Republic Tamil

கிடைத்துள்ள தகவல்களின்படி, ருத்திகா சிங் அடிப்படையில் ஹரியானா மாநிலம் பரீதாபாத்தைச் சேர்ந்தவர். தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டார்-168 பகுதியில் வசித்து வருவதுடன், அங்கு சொந்தமாக ஒரு அழகு நிலையம் (Beauty Parlour ) நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் Citizens for Justice and Peace (CJP) அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி குறித்து ஆட்சேபனைக்குரிய, அவதூறான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இதையும் படியுங்க  "பிரதமரை திட்டிய பெண்.. அழுதுகொண்டே கேட்ட மன்னிப்பு! மோடி செய்த நெகிழ்ச்சியான காரியம்!"

போராட்டத்தில் அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, காசியாபாத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஸ்மிருதி சிங் சந்தேல் (Smriti Singh Chandel) காவல்துறையில் புகார் அளித்தார்.

தனது புகாரில், “இந்தப் பேச்சு பிரதமரின் அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும், பொதுமக்களிடையே வெறுப்பையும் அமைதிக்கேட்டையும் தூண்டும் நோக்கத்துடனும் இடம்பெற்றுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Republic Tamil

இந்தப் புகாரின் அடிப்படையில், நொய்டா எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita – BNS) சட்டத்தின் கீழ் பின்வரும் பிரிவுகளில் ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • பிரிவு 352 – அமைதியைக் குலைக்கும் வகையில் திட்டமிட்டு அவமதித்தல்.
  • பிரிவு 353(1) – பொதுக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகள் வெளியிடுதல்.
  • பிரிவு 356(1) – அவதூறு பரப்புதல்.

இந்தச் சம்பவம் டெல்லியில் நடைபெற்றிருந்தாலும், புகார் நொய்டாவில் அளிக்கப்பட்டதால் முதற்கட்டமாக ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்யப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைக்காக டெல்லி பாராளுமன்ற வீதி (Parliament Street) காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்களின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  "நீட்டுக்கு முடிவுக்கட்டு! வீதியில் இறங்கிய மாணவர்கள்,  டெல்லி தடியடியால் ஸ்தம்பித்த தமிழகம்!"

முதற்கட்ட தகவல்களின்படி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ருத்திகா சிங் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைத் தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

போராட்டத்தின் போது ருத்திகா சிங் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சில வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த வீடியோவில், பிரதமர் மோடியை நோக்கி, “உன்னை எங்கு பார்த்தாலும் சாக்கடையில் இருக்கும் புழுக்களை அள்ளி உன் முகத்தில் வீசுவேன்; உன் வாய்க்குள் நாய் எலும்பைத் திணிப்பேன்” எனக் கடும் ஆவேசத்துடன் பேசியதாகக் கூறப்படுகிறது.

Republic Tamil

அதேபோல், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததுடன், “தடிமனான காண்டாமிருகம், எருதுவின் மகன்” என்று வசைபாடியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துகள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களை நோக்கி இவ்வாறான தரக்குறைவான மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தியதே, அவர்மீது உடனடியாக ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்ய முக்கிய காரணமாக அமைந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக CJP அமைப்பினர் தங்களது கருத்தையும் வெளியிட்டுள்ளனர். “ருத்திகா சிங் பேசிய வார்த்தைகள் தவறானதாக இருக்கலாம். ஆனால் அதற்காக இவ்வளவு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது பொருத்தமான நடவடிக்கை அல்ல” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  பயங்கரவாதத் தொழிற்சாலை பாகிஸ்தான் – ஐநா சபையில் அம்பலப்படுத்திய இந்தியா..!
Republic Tamil

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர், இது பேச்சுச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை என்று விமர்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், நாட்டின் பிரதமர் உள்ளிட்ட உயரிய அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்களை பொதுவெளியில் தரக்குறைவாக அவதூறாகப் பேசுவதை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில், போராட்டங்களில் பங்கேற்கும் இளைஞர்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் போது சட்ட வரம்புகளையும், பொது நாகரிகத்தையும் கருத்தில் கொண்டு பேச வேண்டும் என்ற ஆலோசனைகளும் பல்வேறு தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Republic Tamil

இதனிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சில வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை ஆட்சேபனைக்குரிய வகையில் விமர்சித்ததாகக் கூறப்படும் ருத்திகா சிங் தொடர்பான இந்த வழக்கு தனிப்பட்ட முறையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago