Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது, நடந்து வரும் போரின் தாக்கத்தைக் குறைக்க இந்தியாவிற்கு உதவும் என்று அவர் கூறினார்.

தெலங்கானாவில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான திட்டங்களை காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டிய பின்னர், ஹைதராபாத்தில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி
”உலகளாவிய போர்ச் சூழல், விநியோகச் சங்கிலி நெருக்கடியால் பெட்ரோல், டீசல், உரங்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்தச் சுமை மக்கள் மீது விழாமல் இருக்க அரசு பெரும் நிதியைச் செலவிடுகிறது. எனவே, இறக்குமதிக்காகச் செலவிடப்படும் நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது ஒவ்வொரு குடிமகனின் தேசபக்திக் கடமை என்று பிரதமர் வலியுறுத்தினார்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, மீண்டும் ‘வீட்டிலிருந்து வேலை’ மற்றும் வீடியோ கான்பிரன்ஸ் சந்திப்புகளைப் பின்பற்றுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். பொதுப் போக்குவரத்து , கார் பூலிங் முறையைப் பயன்படுத்த வலியுறுத்தினார்.

இதையும் படியுங்க  'இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் உதவ முன்வருவோம்': பிரதமர் மோடிக்கு டிரம்ப் உறுதிமொழி..!

தங்கம் வாங்குவதற்காகப் பெருமளவு அந்நியச் செலாவணி வெளியேறுவதால், தேசிய நலன் கருதி ஓராண்டிற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார். நடுத்தர வர்க்கத்தினர் திருமணங்களுக்காக வெளிநாடு செல்லும் கலாச்சாரத்தைக் குறைத்து, இந்தியாவிற்குள்ளேயே நிகழ்வுகளை நடத்தவும், வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திவைக்கவும் அறிவுறுத்தினார்.

சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது உடல்நலத்திற்கும் நாட்டின் கருவூலத்திற்கும் நல்லது என்றார். மேலும், ரசாயன உர இறக்குமதியைக் குறைக்க இயற்கை விவசாயத்தை நோக்கி மாற விவசாயிகளை ஊக்குவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago