Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட சுமார் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago