தமிழக அரசியல் களம் இப்போது அண்ணாமலையை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அண்ணாமலை எடுத்து வரும் அதிரடி முடிவுகளும், அவர் வெளியிட்டு வரும் அறிக்கைகளும் பாஜக வட்டாரத்தை மட்டும் அல்லாமல் ஓட்டு மொத்த தமிழக அரசியலிலும் ஒரு பெரும் புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்திருப்பது தான் இப்போது ஹாட் டாபிக்.
சிபிஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை இந்த கல்வி ஆண்டிலேயே கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் என்பது அவரது வாதம். எப்போதும் மத்திய அரசு திட்டங்களுக்கு தீவிர ஆதரவாளராக இருக்கும் அண்ணாமலை இப்போது ஏன் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருக்கிறது. கட்சிக்குள்ளேயே அண்ணாமலைக்கு கடும் அதிருப்திகள் இருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவுகிறது. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவருக்கு டெல்லியில் பெரிய பொறுப்போ அல்லது மத்திய அமைச்சரவைகள் வாய்ப்போ கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்படி எந்த அங்கீகாரமும் வழங்கப்படாதது அண்ணாமலையை மநம் வருந்த செய்திருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சட்டமன்ற தேர்தலின்போது அவரது ஆதரவாளர்களுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் கட்சிக்குள் வலுவாக பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் அண்ணாமலை தனது சொந்த அரசியல் பாதையை தேர்வு செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. என் மண்: என் மக்கள் நடைபயணம் மூலம் தமிழகம் முழுவதும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை அவர் உருவாக்கியுள்ளார். அதையே அடித்தளமாக கொண்டு அவர் புதிய அரசியல் கட்சியை தொடங்கலாம் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் புதிய கட்சியின் பெயர், கொடி குறித்த விவாதங்களை இப்போது தொடங்கி விட்டனர்.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளந. ரஜினிகாந்த் உடன் அவருக்கு இருக்கும் நல்லுறவு காரணமாக தனது அரசியல் காலம் குறித்து அவர் ஆலோசிக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்தப் போக்கை டெல்லி மேலிடம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தமிழகத்தில் பாஜக இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்றதில் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை உணர்ந்த அமித் ஷா நேரடியாக அவரிடம் பேசி சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் வளர்ச்சிக்கு அண்ணாமலை அவசியம் என்பதால் அவரை தக்க வைத்துக் கொள்ள பாஜக தலைமை தீவிரமாக போராடுகிறது. இருந்தாலும் வரவிருக்கும் இடைத் தேர்தலில் தனது ஆதரவு வாக்கு வங்கியை சோதித்துப் பார்க்க அண்ணாமலை திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அண்ணாமலை தமிழக அரசியல் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவாரா என்பதற்கான விடை விரைவில் தெரியவரும்.
