‘ஜெம் வீரமணி’ பற்றி காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் ஓபனாக பேசிக்கொண்டு இருக்கிறார். ஜெம் வீரமணி வழக்கில் தான் தலையிட்டது உட்பட அனைத்தையும் சொல்கிறார். அதே போல பஞ்சாயத்து பேசியது ”தென் மாவட்ட ஜாதி தலைவர் ஜான் பாண்டியன் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
ஜான்பாண்டியனும் ஓபனாக, ஜெம் வீரமணி விவகாரத்தில் தனது ரோல் என்ன? என்பதை பிரஸ் மீட் வைத்து சொல்லிவிட்டார். இந்த வழக்கு பற்றி முதல்வர் விஜயிடம் சில ஐபிஎஸ் லாபியிஸ்டுகள் பேசிப் பார்த்திருக்கிறார்கள். அதை எல்லாம் முதல்வர் விஜய் ஏற்றுக்கொள்ளவில்லை.
”இந்த கேஸில் யாராக இருந்தாலும் ஆக்ஷன் எடுத்திடுங்க” என முதல்வர் விஜய் ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்டதற்கு பிறகு சென்னை கமிஷனர் அமல்ராஜ் இந்த வழக்கில் ரொம்பவே தீவிரமாக இறங்கிவிட்டார்.

ஜெம் வீரமணி சிக்கிய போதே, சீனியர் வழக்கறிஞர் ஒருவர் கமிஷனர் அமல்ராஜை பார்த்து பேசினாராம். அவர் பேசியதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்ட கமிஷனர் அமல்ராஜ், “நீங்க பேசுனவரைக்கும் கேட்டாச்சு.. இனி கேட்கிறதுக்கு ஒன்னும் இல்லை.. இங்கிருந்து நீங்க கிளம்பலைன்னா அரெஸ்ட் பண்ணி உட்கார வெச்சுடுவேன்” என வார்னிங் கொடுக்க, அந்த சீனியர் வழக்கறிஞர் எஸ்கேப் ஆகி இருக்கிறார்.
இதன் பிறகு நேற்று காலையில் இருந்து ஒரே பரபரப்புதான்.. ஜெம் வீரமணி வழக்கை விசாரித்த விபாசர தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மின், விபசார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தார்கள்.
போலீஸ் கமிஷனராக இருந்த அருண், அப்போது உதவி கமிஷனராக இருந்த- இப்போது கோவை கமிஷனராக இருந்த கண்ணன், யாஸ்மின்- மூவருமே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
இதன் அடுத்த கட்டமாக இன்று “மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி ஐபிஎஸ், சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை காவல் ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக ஊடகத் தொடர்பு அலுவலர் முத்தரசி ஐபிஎஸ், சென்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை காவல் ஆணையர் கீதாஞ்சலி ஆகியோரை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு’ அமைக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்ததாக என்ன நடக்க போகிறது என விசாரித்தபோது “காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் புகார் கொடுத்ததாக சொல்கிற துணை ஆணையராக இருந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிற கண்ணன். அவரும் எனக்கு புகார் வந்தது.. அதை கமிஷனர் அருணுக்கு அனுப்பிவிட்டேன் என சொல்கிறார்.
இதன் பிறகு கமிஷனராக இருந்த அருணுக்கு ரொம்பவே நெருக்கமானவரான அண்ணா நகர் கவுதமை போலீஸ் விசாரித்தது. இந்த கவுதமிடம், ஐபிஎஸ் அருணின் பல கோடி ரூபாய் பணம் இருக்கிறது. அருணின் மகள்கள் பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ கார்கள் எல்லாம் கவுதம் கம்பெனி பெயரில்தான் இருக்கிறது. இந்த கவுதமிடம் போலீஸ் விசாரித்ததில் அருணை பற்றிய பல விஷயங்களை சொல்லிவிட்டார். கவுதமிடம் வாங்கிய தகவல்களை வைத்துதான் அருண் மீது ஆக்ஷன் எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்போது முதல் கட்டமாக அருண், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான மகேஷ்குமார் கடந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து 3 வருஷம் நீலாங்கரையில் இன்ஸ்பெக்டராக இருந்திருக்கிறார். திமுக ஆட்சியில் மேலிட ‘செல்வாக்கு’ம் அவருக்கு இருந்தது. இன்னொரு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு இருக்கிறது. ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி விமலா ஆக்ஷன் எடுத்ததால், விஜிலன்ஸ் கமிஷனராக அருண் இருந்தபோது விமலாவை சஸ்பெண்ட் செய்தது சர்ச்சையானது.
இந்த வழக்கில் இன்று அல்லது நாளைக்கு யாஸ்மின், மகேஷ்குமார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட இருக்கிறார்கள். அருண், கண்ணன் மீது அடுத்த ஆக்ஷன் பற்றிய ஆலோசனைகள நடந்துகொண்டு இருக்கிறது. சஸ்பெண்ட்-ல் தொடங்கும் இந்த ஆபரேஷன் கைது வரைக்கும் போக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
