திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அடிக்கடி ஏற்பட்ட உடல்நலக் குறைவைச் சரிசெய்ய, பெற்றோர் அவரை அருகேயுள்ள கொல்லகுப்பம் பகுதியில் உள்ள ஒரு மாந்திரீக கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு சாமியாராக இருந்த சுப்பிரமணி என்கிற ராமசாமி (45) என்பவன் பெண்ணை பார்த்த உடன் ஆடு, கோழி என லிஸ்ட் போட்டுள்ளான். இதையெல்லாம் கொண்டுவந்து பலி கொடுத்தால் மட்டுமே உங்கள் மகளை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் மேலும் கோயிலில் இரண்டு வாரம் தனியாக தங்கி வைத்தியம் பார்த்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறான்.

இதனை நம்பிய பெற்றோர் ஆடு, கோழிகளை வாங்கிக் கொடுத்ததோடு, இரண்டு வாரம் மகளை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். பின்னர் நான்கரை லட்சம் ரூபாய் வரை பெண்ணின் பெற்றோர் அவனிடம் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர், இளம்பெண்ணின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருக்கிறார்

இதனையடுத்து வாணியம்பாடி தனியார் நர்சிங் கல்லூரியில் பாதியில் நிறுத்திய இரண்டாம் ஆண்டு செவிலியர் படிப்பை மீண்டும் தொடர்ந்துள்ளார். இதற்காக தினமும் அவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று பிறகு வீடு திரும்புவது வழக்கம்.
சம்பவத்தன்று , கடந்த மாதம் 22 -ந்தேதி பயிற்சி முடித்துவிட்டு மாலை அரசு பேருந்தில் வீட்டிற்கு வரவில்லை. இருள் சூழ்ந்த பின்னரும், மகள் வீடு திரும்பாததை கண்டு பதறிப்போன பெற்றோர் தனது மகளை தேடி அழைந்தனர். அன்று இரவு சுமார் 7.30 மணிக்கு சாமியர் சுப்பிரமணியிடம் இருந்து பெண்ணின் தந்தைக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. உன் மகளை திருமணம் செய்து கொண்டு இருவரும் திருப்பதிக்கு சென்று கொண்டிருப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருக்கிறான்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை, உறவினர்களை அழைத்துக்கொண்டு டுபாக்கூர் சாமியாரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே அவனது முதல் மனைவி “அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இங்கு யாரும் இருக்க கூடாது. இருந்தால் நீங்கள் அனைவரும் இறந்து விடுவீர்கள். உங்கள் பெண் உடல்நிலை சரியில்லாமல் வந்ததே என் கணவனை அடைய வேண்டும் என்பதால்தான்” என டுபாக்கூர் சாமியாரின் மனைவி புது குண்டை வீசியிருக்கிறார்.

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் ஒன்றுகூடி டுபாக்கூர் சாமியாரின் மனைவியை பலமாக தாக்கியுள்ளனர். அக்கம்பக்கத்தில் விசாரித்த போது வண்டவாளங்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பல பெண்களின் வாழ்க்கையை இந்த டுபாக்கூர் சாமியார் சீரழித்து இருக்கிறான். அதற்கு அவனது மனைவியும் உடந்தையாக இருந்திருக்கிறாள். தற்போது தங்கள் மகளின் வாழ்க்கையையும் சீரழித்து விட்டதாக பெண்ணின் பெற்றோர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஆத்திரப்பட்டனர்

போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து டுபாக்கூர் சாமியார் சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில், அவனும் கடத்தப்பட்ட இளம்பெண்ணும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளதாக ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சம்பவத்தன்று தனியார் மருத்துவமனையில் பகுதிநேர பயிற்சி வகுப்பு முடிந்து வெளியில் வந்த இளம்பெண்னை மிரட்டி, ‘ ‘என்னோடு வரவில்லை என்றால் உங்கள் குடும்பத்தை சூன்யம் செய்து காலி பண்ணுவிடுவேன்” என்று மிரட்டடியாதல் பயந்துபோய் தன் தந்தைக்கு செல் போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு லேட்டாக நகர பேருந்தில் வருவதாக கூறியதாகவும் தன்னை கடத்திச்சென்று அன்று இரவே கல்லரப்பட்டி , கோமலேரி கொட்டாய் பகுதியில் உள்ள அவரது மகா காளியம்மன் கோயில் முன் 4 ஆடுகளை பலி கொடுத்து சாமியாரின் மனைவி, மச்சான் முன்னிலையில் தனக்கு தாலி கட்டி பின்னர் மறுநாள் காலையில் சாமியார் சுப்பிரமணியின் மருமகன் சுந்தர் மூலம் பெங்களூருக்கு சென்று அவரது வீட்டில் இருந்தோம்.

இந்த நிலையில் தந்தை அளித்த புகாரின் பேரில் போலிசார் தேடுவதை அறிந்த சாமியார் சுப்பிரமணி பெங்களூரிலிருந்து அழைத்துக்கொண்டு திருப்பதி, காலஸ்திரி, தஞ்சை பெரிய கோவில், சென்னை என பல இடங்களில் சுற்றி இறுதியாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று காலை பாதுகாப்பு கேட்டு வந்தார்.

என் குடும்பத்திற்கு சூனியம் செய்து காலி செய்து விடுவேன் என மிரட்டியதால் பயந்து போலி சாமியாரிடம் சரணடைந்தேன். அதற்கு பின் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் நினைவிலில்லை. என்னை இந்த சாமியாரிடமிருந்து மீட்டு எனது பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும்” என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்

இதனைத் தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் இளம் பெண்ணை பெண்கள் காப்பகத்திற்கும், டுபாக்கூர் சாமியார் சுபிரமணியனை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *