Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருச்சி விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போது தமிழகத்தின் மாற்றம் முன்னேற்றம் குறைந்த மிச்சம் ஆறு முதல் ஒரு வருடம் நாம் பார்க்க வேண்டும் அதற்கு முன்பு சரி செய்யப்படவில்லை. விவசாய கடன் சார்பாக கடன் நீக்கம் தொடர்பாக தெரிவித்துள்ளார்கள். மாநில அரசின் நிதிச்சுமை சிறு விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடி செய்யாமல் கடன் நீக்கும் தொடர்பாக தெரிவித்துள்ளார்கள்

தேர்தலில் தெரிவித்த வாக்குறுதிகளை இதற்கு திமுக அரசு இது சும்மா இருந்தது மூன்று வருடங்களுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. நிதிச் சுமையை பார்த்து அதன் பிறகு தற்போது இந்த அறிவிப்புகள் நடக்குமா என்பதை பார்க்கலாம்.

காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் மக்கள் பெரும்பான்மை கொடுக்கப்படாமல் இருந்தபோது தனி கட்சி அதிகமான இடத்தில் பெற்று உள்ளது. ஆகையால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆதரவு தெரிவித்தார்கள்.

இதையும் படியுங்க  கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாராம்... தவெகவில் ஐக்கியமான முக்கிய நிர்வாகிகள்...!

எங்கள் கட்சி சார்பாக கூட்டணியில் தொடர்வது தொடர்பாக செயற்குழு பொதுக்குழு கூட்டம் போட்டி அதில் முடிவு செய்யப்படும். நான் எப்போதும் என்னுடைய சின்னத்தில் தான் வெற்றி பெற்றேன். மற்றவர்களைப் போல வேறு சின்னத்தில் போட்டியிட மாட்டேன்.

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் கொறடாவை மீறி வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கலாம் ஒரு கட்சியின் தற்போது நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகி சென்று வருகிறார்கள். தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வது சட்டவிரோதம் அல்ல.

விரைவில் தமிழக அரசு சார்பாக வெள்ளை அறிக்கை நிதி தொடர்பாக வெளியிடப்பட உள்ளது. இப்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, அவர்களது கட்சியின் தலைவர்களிடம் திருப்தி இல்லாததால் அவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்கிறார்கள். தற்போது குற்றம் சொல்லக் கூடிய நபர்கள் அவர்கள் எதுவும் செய்ய வில்லையா?. கடந்த காலங்களில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவரும் திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வெற்றி பெறவில்லையா?, சில தலைவர்கள் கண்ணாடிக் கூண்டில் இருந்து கல்லெறிய கூடாது.

இதையும் படியுங்க  அதிமுக-வை சல்லி சல்லியாக உடைத்த அந்த தொழில் அதிபர்..! அடுத்த டார்க்கெட் தவெக..! அமித் ஷா ஆதரவில் ஆட்டம்..?

கருப்பு சட்டை அணிந்து வந்திருந்து குறித்த அவர் கூறுகையில், நான்கு நாட்கள் சுற்றுலா சென்று இருந்தேன் என்னிடம் வேறு சட்டை கிடையாது இது மட்டும் தான் இருந்தது. ஆகவே இந்த சட்டையை அணிந்து இங்கே வந்துள்ளேன் என அவர் தெரிவித்தார். பேட்டின் போது மாநில நிர்வாகி மருத்துவர் ரெகையாபேகம் மற்றும் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி, சோமு ஆகியோர் உடன் இருந்தனர்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago