திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த நான்கு காவலர்களின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. டவுன் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்துவது வழக்கம் , அதன்படி இந்தாண்டும் காவலர்கள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது

அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் நக்சலைட் கோலோச்சுவதாக எழுந்த புகாரில் அவர்களை ஒடுக்க அன்று எஸ்.பியாக இருந்த தேவாரத்துக்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் முழு அதிகாரத்தை தந்தார். அவர் தலைமையிலான சிறப்பு படைகளில் ஒன்று ஜோலார்பேட்டை ஏலகிரி கிராமத்தில் கடந்த 6.08.1980 ஆம் ஆண்டில் அப்பகுதியில் வலம் வந்த நக்சலைட் சிவலிங்கம் உள்பட 4 பேரை பெருமாப்பட்டு அடுத்த ராஜாபாளையம் கிராமத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர் ,

அப்போது ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளரான பழனிசாமி மற்றும் காவலர்கள் சிவலிங்கம் மற்றும் அவருடன் இருந்தவர்களை கடும் சித்திரவதை செய்து விசாரணைக்காக ஜீப்பில் அழைத்துக்கொண்டு வந்தப்போது திருப்பத்தூர் – திருவண்ணாமலை சாலை சந்திப்பில் நக்சலைட் சிவலிங்கம் ஜீப்பில் இருந்து குதித்து காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசி விட்டு தப்பியதாக கூறப்பட்ட சம்பவத்தில், ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிசாமி, காவலர்கள் முருகேசன், இயேசுதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன் பிறகு , நக்சல்களை ஒடுக்க தேவாரத்துக்கு முழு அதிகாரத்தை தந்தார் எம்ஜிஆர் , அவர் தலைமையிலான தனிப்படை, கிருஷ்ணகிரி, தருமபுரி ,வேலூர் மாவட்டங்களில் நக்சலைட் என்கிற வேட்டை பெயரில், ருத்ர தாண்டவம் ஆடி முற்போக்கு இளைஞர்களை சுட்டுக்கொன்றது, பலரை சித்ரவதை செய்து கைது செய்தனர்,
அவர்களின் குடும்பத்தை சின்னாபின்னமாக்கியது அவர்களில் பலர் காணாமல் போனதாக கூறப்பட்ட புகாரின் விசாரனையும் கிடப்பில் போடப்பட்டது, அரசு கணக்குப்படியே 23- பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது
இந்த வேட்டை முடிந்த பின்புதான் , உயிர் நீத்த காவலர்களின் நினைவாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அவர்களுக்கு நினைவு தூண் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட்- 6 ஆம் தேதி நினைவு அஞ்சலி செலுத்த தேவாரம் முயற்சி எடுத்தார்

அதன்படி , ஆண்டு தோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் ஓய்வுப்பெற்ற டீஜிபி தேவாரம் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். தொடர்ந்து 45 ஆண்டுகளாக நினைவு அஞ்சலி செலுத்தி வந்தார் , இந்த ஆண்டு உடல்நிலை ஒத்துழைப்பு தராததால் இன்று ஆகஸ்ட் 6 / 2026 நடந்த 46-ஆவது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக தோன்றி , நக்சலைட்களை பிடிக்கும் முயற்சியில் உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி காவல் துறை சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
நான் இருக்கும் வரை இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்துகொள்வேன். தற்போது உடல் நிலை ஒத்துழைப்பு இயலாத காரணத்தால் காணொளி காட்சி வாயிலாக பேச வந்துள்ளேன்., உலகத்திலேயே காவலர்களின் தியாகத்தை பேற்றும் வகையில் திருப்பத்தூரில் மட்டுமே இப்படி ஒரு நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுகிறது. தற்போது தமிழ் நாட்டில் நக்சலைட்டுகளின் தாக்கம் இல்லை. இதற்கு காரணம் அன்று தியாகம் செய்த இந்த காவலர்களின் அர்ப்பணிப்புதான் என்றார்.

முடிவில் மரணமடைந்த காவலர்களின் நினுவிடத்தில் , காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் , இறுதியில் காவல்துறை மரியாதையாக குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
