https://republictn.com/

பிரபல கானா பாடகி இசைவாணியின் திருமண வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், மணமேடையிலேயே மணமகள் கோலத்தில் இருந்த இசைவாணி, தனது தனித்துவமான கானா பாடலால் அனைவரையும் கவர்ந்தார்.

“சீனி கொழிக்கணும்… நீலக்கொடி பறக்கணும்…” என்ற வரிகள் இடம்பெற்ற கானா பாடலை இசைவாணி பாடி அசத்தியபோது, விழாவில் கலந்து கொண்டிருந்தோர் உற்சாகமாக ரசித்தனர்.

குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் வன்னியரசு மற்றும் திரைப்பட நடிகர் சாய் தீனா ஆகியோர் மேடையின் அருகில் நின்றபடி அந்தப் பாடலை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.

சென்னையைச் சேர்ந்த இசைவாணி, பிரபல கானா பாடகியாக அறியப்படுகிறார். ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ (The Casteless Collective) இசைக்குழுவுடன் இணைந்து பல சமூக விழிப்புணர்வு மற்றும் தத்துவக் கருத்துகளை மையமாகக் கொண்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும், உலகளவில் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலை வெளியிடும் பிபிசி (BBC) அமைப்பின் பட்டியலிலும் இசைவாணி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago