Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அண்ணாமலையின் டார்கெட்..! சத்தமில்லாமல் போடப்பட்ட மாஸ்டர் பிளான் இப்போ தெரிகிறதா ஏன் உள்ளாட்சி என்று தமிழக அரசியலில் புதிய களத்தை கட்டமைக்க தயாராகிறார் அண்ணாமலை. பாஜாகாவிலிருந்து விலகி வீத லீடர்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கும் அவர், அடுத்த கட்டமாக உள்ளாட்சி தேர்தலை இலக்காக கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைஞர்களையும் பெண்களையும் முன்னுறுத்தி அடிமட்டத்திலிருந்து புதிய அமைப்பை கட்டமைப்பதே அவரது திட்டமாக இருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதன் மூலம் தனது அமைப்பின் பலத்தை நிரூபிக்க அண்ணாமலை கணக்கு போட்டு வருகிறார். தமிழகத்தில் நீண்ட காலமாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை மையமாக கொண்டே அரசியல் நகர்ந்து வந்த நிலையில் இரண்டு வருடங்களில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றி பெற்று மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறார் விஜய்.

இந்த சூழலில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி களமிறங்குவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. குறிப்பாக தேர்தலில் போட்டியிடுவதுடன் நின்றுவிடாமல் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மக்களுடன் தொடர்புடைய நிர்வாகிகளை உருவாக்க வேண்டிய கட்டாயமும் அண்ணாமலைக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டே வீத லீடர்ஸ் அமைப்பை அடிமட்டம் வரை கொண்டு செல்லும் முயற்சியில் அவர் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Republic Tamil

புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்புகளை தனது அரசியல் பயணத்துக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ள அண்ணாமலை திட்டமிடுகிறார். வேலை வாய்ப்பு, போதை பொருள் பிரச்சனை, உள்ளூர் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் என பல்வேறு விவகாரங்களில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அவர்களை சமூக பணிகளில் ஈடுபடுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதையும் படியுங்க  "விஜய்க்கு மயக்கத்துல ஓட்டு போட்டுட்டோம்..'' இனி நமக்கு அண்ணாமலைதான்..! காவல்துறையில் வெடிக்கும் 2031 'மாஸ்' அரசியல்!

குறிப்பாக அரசியலில் பதவியை எதிர்பார்ப்பவர்களாக மட்டுமின்றி தங்கள் ஊரின் வளர்ச்சிக்காக செயல்படக்கூடிய புதிய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பதே இந்த முயற்சியின் அடிப்படையாக இருக்கிறது. ஊர் குளங்களை சுத்தம் செய்வது, நீர்நிலைகளை பாதுகாப்பது, போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு ஊரிலும் மக்களுடன் நேரடி தொடர்பை உருவாக்க முடியும் என கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பதற்கு பதிலாக தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயல்பட்டால் அமைப்பின் மீதான நம்பிக்கையை உருவாக்க முடியும் என்பதே இந்த வியூகத்தின் முக்கிய அம்சம். இதில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தலில் புதிய முகங்களை முன்னிறுத்துவதன் மூலம் வழக்கமான அரசியல நடைமுறையில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையை உருவாக்க அவர் முயற்சி செய்யலாம். ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் பிரச்சனைகளை அறிந்தவர்கள் மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் சமூக பணிகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பளிப்பது அமைப்பின் கட்டமைப்பை உருவாக்க உதவும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் என்பது லட்சக்கணக்கான உள்ளூர் அரசியல் களங்களை உள்ளடக்கியது.

இதையும் படியுங்க  அரசியலில் முதல்வர் விஜயை அண்ணாமலை அடிச்சுக் தூக்குவது உறுதி..! மூன்று முக்கிய காரணங்கள்..!

ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், நகராட்சி மற்றும்
மாநகராட்சி பிரதிநிதிகள் என பல்வேறு நிலைகளில் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் அணிகளை ஒருங்கிணைப்பது வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளூர் நிர்வாகிகளை உருவாக்குவது போன்றவை புதிய அமைப்புக்கு முக்கியமான பணிகளாக இருக்கும். இந்த தேர்தலில் அதிகளவில் இளைஞர்களை முன்னிறுத்துவதுடன் பெண்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நீண்ட கால அரசியல் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பது அண்ணாமலையின் கணக்காக உள்ளது.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால் தேர்தலில் கிடைக்கும் அனுபவம் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கும் அடித்தளமாக அமையும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே களத்தில் தனது அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டடிருக்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்களை சந்திப்பது, புதிய நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, இளைஞர்கள் மற்றும் பெண்களை அமைப்பில் இணைப்பது, உள்ளூர் பிரச்சனைகளை அறிந்து கொள்வது போன்ற பணிகளை முன்னெடுக்க முடியும். சுற்றுப்பயணம் நடைபெறும் பகுதிகள் மற்றும் அதற்கான விரிவான திட்டங்கள் வெளியானால் வீத லீடர்ஸ் அமைப்பின் கலப்பணிகள் எந்த அளவுக்கு விரிவடைகின்றன என்பது தெளிவாகும். அண்ணாமலை தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக உள்ளாட்சி தேர்தலை தேர்ந்தெடுத்திருப்பது அவரது புதிய அமைப்புக்கு ஒரு முக்கியமான சோதனையாக இருக்கலாம். தனிப்பட்ட செல்வாக்கை அமைப்பு ரீதியான ஆதரவாக மாற்றுவது புதிய வேட்பாளர்களை உருவாக்குவது வாக்குச்சாவடி அளவில் பணிகளை ஒருங்கிணைப்பது என பல்வேறு சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்க  அமித் ஷா சமாதானம்… ரஜினியுடன் சந்திப்பு? தமிழக பாஜக-வில் பூகம்பம்: அண்ணாமலையின் அடுத்த மூவ்..!
Republic Tamil

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மாற்றத்தை முன்னெடுப்போம் என்ற நோக்கத்துடன் வீத லீடர் சமைப்பை விரிவுபடுத்த அண்ணாமலை திட்டமிடுகிறார். இளைஞர்கள், பெண்கள், உள்ளூர் நிர்வாகிகள் என பல தரப்பினரையும் இணைத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு அதன் மூலம் சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளத்தை உருவாக்குவது அவரது அரசியல் பயணத்தின் முக்கிய இலக்காக இருக்கிறது. பாஜகவில் இருந்து விலகிய பிறகு தனி அமைப்பை உருவாக்கி இருக்கும் அண்ணாமலை. இனி தனது செல்வாக்கை எவ்வாறு தேர்தல் வெற்றியாக மாற்ற போகிறார் என்பதை கவனிக்க வேண்டிய விஷயம்.

இரண்டு கட்ட சுற்றுப்பயணம் ஊருக்கு ஊர் அமைப்பு கட்டமைப்பு இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை என அவர் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும்போது தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் களத்தில் வீத லீடர்ஸ் அமைப்பின் பங்களிப்பு தமிழக தேர்தல் களத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago