Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Rotty

குற்றம் என்னவாக இருந்தாலும், தண்டனை எப்படி இருந்தாலும், “அப்பா பசியோடு இருக்கிறார்” என்ற ஒற்றை உணர்வுக்கு முன்னால் சட்டமும், சமூகமும் மண்டியிட்ட நெகிழ்ச்சி கதை இது.

வங்கதேசம், பரிசல் மாவட்டம், வசிர்பூர் உபாசிலாவில் உள்ள பாம்ரைல் பஜார். கடந்த செப் – 25 வெள்ளிக்கிழமை இரவு. திருட முயன்றதாகக் குற்றம் சாட்டி, அனிக் சர்தார் என்ற நபரை உள்ளூர் வியாபாரிகள் பிடித்து கைகால்களைக் கட்டி, சந்தையின் நடுவே இருந்த மரக்கம்பத்தில் கட்டி வைத்தனர். போலீசிடம் ஒப்படைக்காமல், இரவு முழுவதும் அவரை அங்கேயே கட்டிப்போட்டு, நையப்புடைத்துள்ளார்கள்

மறுநாள் காலை… விடிந்ததும் சந்தைக்கு ஓடி வந்ததாள் அவரது 9 வயது மகள். கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, கம்பத்தில் துவண்டு கிடந்த அப்பாவைக் கண்டு கதறி அழுதாள் அந்தச் சிறுமி. பசியால் துடித்த அப்பாவைப் பார்க்கச் சகிக்காமல், தன் சேமிப்புக் காசை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் டீயும், ரொட்டியும் வாங்கி வந்தாள். நடுங்கும் கைகளால், கண்ணீர் வழிய, தன் கையாலேயே அப்பாவுக்கு ஊட்டிவிட்டாள். அந்த நெஞ்சைப் பிளக்கும் காட்சி வீடியோவாகப் பதிவாகி இணையத்தில் வைரலானது.

இதையும் படியுங்க  ஆப்பிள் போனா? இல்ல திருவிழாவா? 12 மணிநேரக் காத்திருப்பு… ஐபோன் 18-க்காக மாநிலம் கடந்து வெறித்தனம் காட்டிய இளைஞர்கள்!

அந்த ஒரு காட்சி போதுமானதாக இருந்தது. “இது நீதியா? இது மனிதமா?” என்று வங்கதேச சமூக வலைதளங்கள் கொந்தளித்தன. சட்டத்தைக் கையில் எடுத்த வியாபாரிகள் மீது கடும் கண்டனங்கள் குவிந்தன. பின்னர் சனிக்கிழமை காலை 9 மணியளவில், குடும்பத்தினரிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழி வாங்கிக்கொண்டு அனிக் சர்தாரை விடுவித்தனர். தகவலறிந்து போலீஸ் குழு சென்றபோது அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தார். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்

கம்பத்தில் கட்டப்பட்டது அனிக் சர்தார் மட்டுமல்ல… அந்த இரவில் மனிதநேயமும்தான் கட்டப்பட்டுக் கிடந்தது. அதை அவிழ்த்துவிட்டது, ஒரு சிறுமியின் கண்ணீரும், அவள் ஊட்டிவிட்ட ஒரு வாய் ரொட்டியும்தான்!

இதையும் படியுங்க  இந்தியாவுக்குப் புதிய அச்சுறுத்தல்..! பாகிஸ்தானுடன் வங்காளதேசம் ராணுவக் கூட்டணி..! ரூ.27,000 கோடிக்கு ஆயுத வேட்டை..!

குற்றவாளியாக இருக்கலாம்… ஆனால் அவளுக்கு அவர் எப்போதும் ஹீரோதான். அப்பா என்ற சொல்லுக்கு முன்னால், இந்த உலகின் எந்தச் சட்டமும் சிறு துரும்புதான் என்பதை அந்தச் சிறுமி உணர்த்திவிட்டாள்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago