Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசாவைக் கூடத் தொட மாட்டேன்; அப்படித் தொட்டவர்களைச் சும்மா விடமாட்டேன்” என்று வீரவசனம் பேசிய முதலமைச்சர், இப்போது அதே மக்களின் வரிப்பணத்தில் நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம்? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனம், ஓட்டுநர், வாகனப் பராமரிப்புக்காக மாதம் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்” என்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு, ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும்’ செயலாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சொந்தமாக வாகனங்கள் வைத்துள்ள நிலையில், அவர்களுக்கு அரசின் சார்பில் காரும், பராமரிப்புச் செலவாக மாதம் 75 ஆயிரம் ரூபாயும் வழங்குவது அரசுக்கு தேவையற்ற கூடுதல் சுமையாகும். த.வெ.க (TVK) சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அதைத் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சிப் பணத்திலோ செய்யலாமே என்ற கேள்வி தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதையும் படியுங்க   "ரிப்பன் மாளிகை கதவுகளை உடைத்து தூய்மைப் பணியாளர்கள் அதிரடி முற்றுகை! "வாக்குறுதிகள் என்னாச்சு?" - முதல்வர் விஜய்க்கு அவசரக் கோரிக்கை!"

தமிழக அரசின் கஜானா காலியாக உள்ளது என்றும், சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் கடனில் மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது என்றும் வெள்ளை அறிக்கை வெளியிட்ட த.வெ.க அரசு, “விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குவோம், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் கொடுப்போம், அனைத்து மகளிருக்கும் இலவச பேருந்துப் பயணம்” போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது ஏன்? அப்படிப்பட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வாங்க மட்டும் இந்த நிதி எங்கிருந்து வந்தது?

மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசாவைக் கூடத் தொட மாட்டேன்; அப்படித் தொட்டவர்களைச் சும்மா விடமாட்டேன்” என்று வீரவசனம் பேசிய முதலமைச்சர், இப்போது அதே மக்களின் வரிப்பணத்தில் நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம்?

எனவே, தனது துறையின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அரசு செலவில் வாகனங்கள் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான வாகனங்களை அவர்கள் சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கிக் கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  பகை முடிக்கும் தவெக..! மொத்தமாய் ரேடாரில் சிக்கும் திமுக..! ஸ்கெட்ச் போட்ட முதல்வர் விஜய்..! அலறும் அறிவாலயம்..!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago